தினசரி 2ஜிபி டேட்டாவுக்கு மாத செலவு ரூ.185 மட்டுமே! சூப்பர் ஆஃபர் தரும் பிஎஸ்என்எல்!

வாடிக்கையாளர்களுக்கு மெகா பம்பர் திட்டமாக பிஎஸ்என்எல் 395 நாட்களுக்கான ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் பல நன்மைகள் உண்டு. இந்தத் திட்டத்தால் போட்டி நிறுவனங்களுக்கு அழுத்தம் ஏற்படும் என்றுதெரிகிறது. பிஎஸ்என்எல் வழங்கும் ₹2,399 திட்டம் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.  

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை தொடங்க உள்ளதால் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது. இந்த மாதம் (ஜூலை 2024) முதல் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் விலையை உயர்த்தியதற்குப் பிறகு, பிஎஸ்என்எல் 395 நாட்களுக்கான சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தில், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, எவ்வளவு அழைப்பு வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம் என்பது உட்பட பல நன்மைகள் கிடைக்கும். BSNL ₹2,399 திட்டம் பற்றிய விவரங்களை விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.  

பிஎஸ்என்எல் 2,399 ரூபாய் திட்டம்

2399 ரூபாய் ஆண்டுக்கு செலுத்தும் பிஎஸ்என்எல் திட்டத்தின் படி, ஒவ்வொரு மாதமும் ரூ.185 மாதந்திர செலவாக இருக்கும். 2 ஜிபி அதிவேக டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் அழைப்புகள் என்ற வசதிகள் உண்டு. இலவச ரோமிங் வசதிகளுடன், Zing Music, BSNL Tunes, Hardy Games, Challenger Arena Games, GameOn Astro Tale என அசத்தலான பல நன்மைகளையும் பிஎஸ்என்எல் 2399 ரூபாய் திட்டம் கொடுக்கிறது.

விலை அதிகரிப்பால் திண்டாடும் வாடிக்கையாளர்கள்

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அண்மையில் தங்கள் பல திட்டங்களின் விலைகளை உயர்த்தியதால், ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை எடுத்துள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு மாதாந்திர செலவு அதிகரித்தது.  

ஏர்டெல் விலை அதிகரித்த திட்டங்கள்

ஏர்டெல் தனது பல பிரபலமான திட்டங்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் நல்ல சேவையை வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 28 நாட்களுக்கு 1 ஜிபி தினசரி டேட்டா திட்டத்தின் விலை ரூ.265 ஆக இருந்த நிலையில், அதே திட்டத்தின் விலையை ஏர்டெல் தற்போது ரூ.299 ஆக அதிகரித்துள்ளது.

28 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டத்தின் விலை ரூ.299ல் இருந்து ரூ.349 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர, 28 நாட்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டா கொண்ட திட்டத்தின் விலை ரூ.359 ஆக இருந்து ரூ.409 ஆக அதிகரித்துள்ளது. 84 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டத்தின் விலை ரூ.719ல் இருந்து ரூ.859 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல,  84 நாட்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டா கொண்ட திட்டத்தின் விலை ரூ.839இல் இருந்து ரூ.979 ஆக அதிகரித்துள்ளது. ஆண்டு முழுவதும் 2.5 ஜிபி தினசரி டேட்டா கொண்ட ரூ.2999 திட்டம், தற்போது ரூ.3599 என்ற அளவுக்கு அதிகரிப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.