ட்ரம்ப் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியின் கணவர் – யார் இந்த Usha Chilukuri Vance?

அமெரிக்காவில் (America) இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆளும் ஜனநாயக கட்சியில் (Democratic Party) அதிபர் ஜோ பைடனுக்கு (Joe Biden) எதிராக எதிர்ப்புக்குரல் எழுந்துகொண்டிருக்க இன்னும் யார் வேட்பாளர் என்பது முடிவாகவில்லை. அதேசமயம், குடியரசு கட்சியில் (Republican Party) முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கூடவே, இந்திய வம்சாவளி உஷா சிலுக்குரி வான்ஸின் (Usha Chilukuri Vance) கணவர் ஜே.டி.வான்ஸ் (JD Vance) குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

JD Vance – Usha Chilukuri Vance

ஒரு தேசிய நிறுவனத்தில் வழக்கறிஞராக இருக்கும் உஷா, ஆந்திராவைப் பூர்விமாகக் கொண்டவர். கலிஃபோர்னியாவில் பிறந்த இவர், சான் டியாகோவின் புறநகர்ப் பகுதிகளில் வளர்ந்தார். தனது பள்ளிப்படிப்பை, Rancho Penasquitos-ல் அமைந்துள்ள Mt Carmel உயர்நிலைப் பள்ளியில் முடித்த உஷா, யேல் பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நவீன வரலாற்றில் M.Phil பட்டமும் பெற்றிருப்பதாகப் பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர், 2013-ல் யேல் சட்டப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது முதல்முறையாக ஜே.டி.வான்ஸை நேரில் சந்தித்தார். அப்போது, `வெள்ளை அமெரிக்காவின் சமூக வீழ்ச்சி (social decline in white America)’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் குழுவை ஏற்பாடு செய்ய இருவரும் ஒன்றாக வேலை செய்தனர். பின்னர், 2014-ல் கென்டக்கியில் திருமணம் செய்து கொண்டனர்.

ஜே.டி.வான்ஸ் – உஷா சிலுக்குரி வான்ஸ்

இவர்களுக்கு, மிராபெல் என்ற மகளும், இவான், விவேக் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். உஷா தனது தொழில்முறையைப் பொறுத்தவரையில், 2018-ல் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் சட்ட எழுத்தராகப் பணியாற்றுவதற்கு முன்பு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜான் ராபர்ட்ஸ் மற்றும் பிரட் கவனாக் ஆகியோருக்கு எழுத்தராகப் பணியாற்றியிருக்கிறார்.

JD Vance – Usha Chilukuri Vance

இதற்கு முன்பாக, சான் ஃபிரான்ஸிலுள்ள Munger, Tolles & Olson LLP என்ற சட்ட நிறுவனத்தில் 2015 முதல் 2017 வரை பணிபுரிந்திருக்கிறார். இவை மட்டுமல்லாது, யேல் லா ஜர்னலின் (Yale Law Journal) நிர்வாக மேம்பாட்டு ஆசிரியராகவும், யேல் ஜர்னல் ஆஃப் லா அண்ட் டெக்னாலஜியின் (Yale Journal of Law and Technology) நிர்வாக ஆசிரியராகவும் உஷா பணியாற்றியிருக்கிறார்.

கல்வி, அரசு, சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் சிக்கலான சிவில் வழக்குகளில் அனுபவம் வாய்ந்தவராக உஷா அறியப்படுகிறார். இவ்வாறு கல்வி மற்றும் தனது தொழில்முறையில் குறிப்பிடத்தக்க உயரத்தை அடைந்திருக்கும் உஷா, தன்னுடைய கணவரின் அரசியல் வாழ்விலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கிறார். குறிப்பிக்க, 2016, 2022-ல் தனது கணவரின் வெற்றிகரமான செனட் பிரசாரங்களில் இவர் பங்கேற்றிருக்கிறார். தன் மனைவியின் செல்வாக்கு தனக்கு இருப்பதையும் ஜே.டி.வான்ஸ் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

JD Vance – Usha Chilukuri Vance

ஜே.டி.வான்ஸுக்கு உஷா பக்க பலமாக இருப்பது குறித்து பேசியிருக்கும் ட்ரம்பின் நண்பரும், தொழிலதிபருமான ஒருவர், “இந்தியா மற்றும் இந்திய கலாசாரம் பற்றிய அனைத்தையும் உஷா அறிந்திருக்கிறார். அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான சிறந்த உறவுகளை வழிநடத்துவதற்கு அவர் தனது கணவருக்கு ஒரு பெரிய உதவியாக இருக்க முடியும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், ஜே.டி.வான்ஸுக்கு அவர் ஆதரவளிப்பது குறித்து தனியார் ஊடகத்திடம் பேசியிருக்கும் உஷா, “சில வித்தியாசமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று நான் மதம் சார்ந்த குடும்பத்தில் வளர்ந்தவள். என் பெற்றோர்கள் இந்துக்கள். எங்களை நல்ல பெற்றோராகவும் நல்ல மனிதர்களாகவும் மாற்றியதில் இதுவும் ஒன்று. ஜே.டி.வான்ஸ் எதையோ தேடிக் கொண்டிருப்பதை நான் அறிந்தேன். அதனால், இது அவருக்கு சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது” என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.