சேலம் `இரும்புகடையில் போட்டா காசு கிடைக்கும்ல'- குற்ற வழக்கில் சிக்கிய பைக்குகளை விற்க முயன்ற போலீஸ்

சேலம் மாநகரில் உள்ள முக்கிய காவல் நிலையங்களில் சூரமங்கலம் காவல் நிலையமும் ஒன்றாகும். இங்கு சட்டம் & ஒழுங்கு காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், உதவி ஆணையர் அலுவலகம், மதுவிலக்குப் பிரிவு, போக்குவரத்துப் பிரிவு, மாநில உளவுத்துறை அலுவலகம், குற்றப்பிரிவு என ஒரே கேம்பசில் அனைத்து அலுவலகங்களும் தனித்தனியே இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்துப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சரஸ்வதி என்பவர் குற்றவழக்குகளில் பிடிக்கப்பட்டு நீண்ட நாள்களாக காவல் நிலைய வளாகத்தில் கிடந்து வந்த இருசக்கர வாகனங்களை, வெளியிலிருந்து ஆட்டோ கொண்டு வந்து ஏற்றியுள்ளார். அதனை பார்த்த மற்ற காவலர்களுக்குச் சந்தேகம் வந்து, சம்பந்தப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளரிடம் எதற்காக எடுத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

போலீஸ் விசாரணை

முதலில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தவர், கடைசியில்… `அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகிடுச்சு, அதை சரிப்பண்ண பணம் தேவைப்படுது. அதான் இந்த பைக்குகளை இரும்புக்கடையில் போட்டு, அந்தப் பணத்தில் கம்ப்யூட்டர் சரிசெய்யலாம்னு நினைத்தேன். அதற்காகத்தான் பைக்குகளை கொண்டு செல்கின்றேன்’ என்று கூறியுள்ளார். அதைக் கேட்டு பதறிய பிற காவல்துறையினர், உடனே உயரதிகாரிக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்மூலம் சம்பந்தப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சரஸ்வதியை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தவிட்டார் மாநகர காவல் ஆணையாளர்.

மேலும் இது போன்று ஏற்கெனவே சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதா, இதில், வேறோ யாருக்காவது தொடர்பு உள்ளதா என்கிற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.