`ஜோடி' டைட்டில் வின்னரை மணம் முடித்த `கனா காணும் காலங்கள்' தீபிகா!

`கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸின் முதல் பாகத்தில் ஹரிதா கதாபாத்திரத்தில் டாம்பாய் கெட்டப்பில் நடித்திருந்தவர் தீபிகா. இவருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பான `உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான மனோஜ் ஜாக்‌ஷனுக்கும் கடந்த வாரம் கோயம்புத்தூரில் பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

தீபிகா – மனோஜ்

இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் டான்ஸ் ஃபேவரைட் என்பதால் இருவரும் சேர்ந்து டான்ஸ் ஆடிப் பல வீடியோக்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். இவர்களுடைய ரசிகர்கள் தொடர்ந்து இருவரும் காதலிக்கிறீர்களா எனக் கேட்டதற்கான பதில் தற்போது கிடைத்திருக்கிறது.

மனோஜ், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி சீசன் 5’ நிகழ்ச்சியிலும் டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்றார். கடந்த ‘ஜோடி ஆர் யூ ரெடி’ சீசனில் போட்டியாளராக தீபிகாவும் கலந்து கொண்டார். நடனத்தின் மீதுள்ள காதலே இருவரையும் ஒன்றிணைத்திருக்கிறது. 

தீபிகா – மனோஜ்

இந்தத் திருமண நிகழ்வில் `கனா காணும் காலங்கள்’ டீமிலிருந்து சிலர் கலந்து கொண்டிருக்கின்றனர். மனோஜ் நடன இயக்குநராகத் தற்போது பணியாற்றி வருகிறார்.

வாழ்த்துகள் தீபிகா – மனோஜ்! 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.