பாடசாலை கல்வியில் அழகியல் பாடங்களை நீக்குவதற்கு எவ்வித கொள்கைத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை – அமைச்சரவைப் பேச்சாளர்

பாடசாலை கல்வியில் அழகியல் மற்றும் கலைப் பாடங்களை நீக்குவதற்கு அரசாங்கம் எவ்வித கொள்கை தீர்மானங்களையும் இதுவரை எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (16) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கலைப் பாடங்கள் கல்வித்துறையில் காணப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அமைச்சரவை பேச்சாளர் அதனை விட சரளமாக கல்வியின் மறுசீரமைப்பு தொடர்பாகக் கலந்துரையாடுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேற்கு நாடுகளில் சமய பாடங்களை கற்பிக்காமல் இருப்பினும் எமது நாட்டில் எக்காரணத்திற்காகவும் சமய பாடங்களை கல்வியில் இருந்து நீக்குவதில்லை என்றும், நடனம், சங்கீதம், அழகியல் , சித்திரம் போன்ற அழகிய கலை பாடங்களை பாடசாலைகளின் பாடவிதானத்திலிருந்து நீக்காதிருப்பதாகவும், அவை பிள்ளைகளுக்கு ஆரம்ப மற்றும் இடைக் கல்வியில் அத்தியாவசியமானவை என்றும் மேலும் அமைச்சர் பந்துல குணவர்தன விவரித்தார்.

நாட்டில் 50%இற்கும் அதிகமானவர்கள் கலைத்துறையின் பாடங்களை கற்று பரீட்சைகளில் சித்தி அடைந்து வாழ்க்கை தோல்வி அடையும்அதிகமானவரர்கள் உருவாக்கப்படுவதாகவும், பட்டம் வரையை கல்வியை பூர்த்தி செய்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் வாழ்க்கையை தொடர முடியாது போன அவர்கள் பாதுகாப்புத் தேடிய படித்தவர்களுக்கு வழங்குவதற்கு தொழில் இல்லை என்றும் காணப்படும் தொழில் வாய்ப்பிற்காக அவசியமான படித்தவர்கள் உருவாகுவதில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்போது வேலையின்மையின் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வு ஏற்படுவதாகவும், அதனால் கலவரங்கள் ஏற்படுவதாகவும், இளைஞர்கள் பாரிய அளவில் சமூகத்திற்கு வெறுப்பை காட்டுவதை வரலாற்றில் ஏற்பட்டதாகவும் அமைச்சர் நினைவு படுத்தினார்.

இவ்வாறு காலம் கடந்த பரீட்சைகளை மையமாகக் கொண்ட கல்வி முறையில் மனிதன் ஒருவனின் திறமை, ஆளுமை, நிர்மாணப் படைப்புகள் போன்றவற்றை முன்னேற்றி நாட்டிற்கும் உலகத்திற்கும் வளமான குழந்தை ஒன்றை உருவாக்காது இருப்பதனால் தான் உருவாக்கிய பெற்றோரை மற்றும் தன்னை வளர்த்த ஆசிரியர்களை கொலை செய்யக்கூடிய நபர்கள் உருவாகியதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெளிவுபடுத்தினார்.

சமூக வெறுப்புடைய இந்த நாட்டின் சிறுவர் பரம்பரைக்கு அவசியமான முறையான ஜீவனோ பாயத்தை திட்டமிடகூடிய சிறந்த கல்வ முறையொன்று இன்மையால் என்றும் இரண்டாம் உலகப் போரில் விழுந்த ஹிரோஷிமாவை மனிதாபிமானத்தினாலே மூன்றும் எழுப்பியதாக நினைவு கூர்ந்தார்.

அழகிய கல்வியை தொடர்ந்தும் வழங்காமல் மேலும் அபிவிருத்தி அடைந்து காணப்படுவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.