இலங்கையின் கிரிக்கெட் வீரரான தம்மிக்க நிரோஷன், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் 2002-ம் ஆண்டு இடம் பெற்றிருந்தார். 19 வயதுக்குட்பட்டோருக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருந்த இவர், இலங்கையின் அம்பலாங்கொடை என்ற பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 16-ம் தேதி தம்மிக்க நிரோஷன், மனைவி, குழந்தைகளுடன் வீட்டில் இருந்திருக்கிறார். வழக்கம்போல வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தபோது, மனைவி, குழந்தைகள் கண்முன்னே, தம்மிக்க நிரோஷனை பைக்கில் வந்த இரண்டுபேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருக்கின்றனர்.
இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறை, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது. தம்மிக்க நிரோஷனை கொலை செய்தவர்கள் குறித்த எந்த அடையாளமும் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறது. முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட தம்மிக்க நிரோஷன் சமீபத்தில்தான் துபாயிலிருந்து இலங்கை திரும்பியிருக்கிறார். இவருக்கு அம்பலாங்கொடையில் நிழல் தாதா ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இது தவிர, தம்மிக்க நிரோஷனின் மரணத்தின் பின்னணியில் சந்தேகப்படும்படி அவர் மீதான எந்த கிரிமினல் வழக்கும் இல்லை. 20-வது வயதில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை கைவிட்ட தம்மிக்க நிரோஷன், இளம் வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து விலகுவதற்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. குற்றவாளிகளை கைது செய்வதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88