காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் புதிய டீசரை வெளியிட்ட ஸ்கோடா

வரும் ஜனவரி 2025-ல் விற்பனைக்கு வரவுள்ள MQB-A0-IN பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டு வரவுள்ள நான்கு மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள காம்பேக்ட் எஸ்யூவி காரின் பின்புறப்பகுதியினை தற்பொழுது முதல்முறையாக டீசரில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த காரின் முகப்பு அமைப்பை டீசர் மூலம் இந்நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

ரூபாய் 7 முதல் 8 லட்சம் விலைக்குள் துவங்க உள்ள இந்த மாடலானது ஏற்கனவே சந்தையில் உள்ள மிகக் கடுமையான போட்டியாளரான டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, ஹூண்டாய் வெனியூ, கியா சோனெட், மாருதி பிரெஸ்ஸா உள்ளிட்ட பல்வேறு மாடல்களுக்கு கடுமையான சூழ்நிலை ஏற்படுத்தும்.

இந்த MQB-A0-IN பிளாட்பாரத்தில் ஏற்கனவே இந்திய சந்தையில் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லாவியா மற்றும் குஷாக் போன்ற மாடல்கள் கிடைக்கின்றன.

“எங்கள் புதிய காம்பாக்ட் எஸ்யூவியின் அறிவிப்புடன் 2024 ஆம் ஆண்டைத் தொடங்கினோம். 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், நாங்கள் நல்ல பாதையில் இருக்கிறோம். எங்களின் காம்பாக்ட் எஸ்யூவி ஆனது, இந்தியா முழுவதும் உள்ள எங்கள் சாலைகளில் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது, மேலும் எங்களது தயாரிப்புகள், உயர் திறன்கள் மற்றும் தரமான உள்ளூர் சப்ளையர் பார்ட்னர் ரேம்ப்-அப்களுடன் இணைந்து சிறந்த நுணுக்கங்களை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்.

புதிய காம்பாக்ட் எஸ்யூவி, இந்திய சாலைகளில் நமது ஐரோப்பிய தொழில்நுட்பத்தை உண்மையிலேயே ஜனநாயகப்படுத்தும். இது ஒரு பெரிய கார் MQB-A0-IN அடிப்படையாகக் கொண்டிருப்பதால், எங்களின் காம்பாக்ட் எஸ்யூவி ஆனது ஒரு சிறிய கால்தடத்தில் ‘பெரிய கார்’ உணர்வைக் கொண்டிருக்கும், இதனால் இந்தியாவிற்கான எங்கள் பிராண்ட் அர்ப்பணிப்புக்கு ஏற்ப, மிக முக்கியமான சந்தையாக புதிய கார் வாங்குபவர்களுக்கு ஒரு பெரிய ஈர்ப்பைக் கொண்டிருக்கும்.

ஐரோப்பாவிற்கு வெளியே ஸ்கோடா ஆட்டோவிற்கு  உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான ஸ்கோடா கார்கள் எங்கள் உள்ளூர் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன, மேலும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஸ்கோடா கார்களை 14 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.

115hp பவரை வழங்குகின்ற 1.0 லிட்டர் பெட்ரோல் டர்போ என்ஜின் 170 Nm டார்க் பெற வாய்ப்புள்ளது. 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் கியர் பாக்ஸ் எனது பெறலாம்.

இந்த எஸ்யூவி காருக்கான பெயர் அனேகமாக Kwiq, Kymaq, Kylaq, Kariq, மற்றும் Kyroq ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.