ஹானர் 200 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்! ஸ்மார்டான 2 மொபைல்கள்!

ஹானர் 200 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 200 சீரிஸ் என்ற தொடர் போன்களின் வரிசையில் ஹானர், இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Honor 200 மற்றும் Honor 200 Pro 5G ஆகிய இரண்டு போன்களிலும் மூன்று பின்புற கேமரா அமைப்புகள் உள்ளன. ஃபோன்களில் குவாட் வளைந்த டிஸ்ப்ளே கிடைக்கிறது. 

7.7mm தடிமன் கொண்ட Honor 200 5G போன், இரு வேறு வண்ணங்களில் வருகின்றன. ஸ்மார்ட்டான இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் முழு விவரங்களையும் தெரிந்துக் கொள்வோம்.

ஹானர் 200 சீரிஸ் 5ஜி வண்ணங்கள்
Honor 200 5G ஸ்மார்ட்போன் மூன்லைட் ஒயிட் மற்றும் பிளாக் என இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. ஸ்மார்ட்போனின் அடிப்படை மாறுபாடு 256 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் கொண்டது.

ஹானர் 200 சீரிஸ் 5ஜி விலை
34,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த போனின் டாப் வேரியண்ட் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது. டாப் வேரியண்டின் விலை ரூ.39,999. 

தள்ளுபடி விலை
போனை வாங்கும்போது 1000 ரூபாய் உடனடி தள்ளுபடியும், வங்கிகளின் அட்டையில் வாங்கும்போது 2000 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும். 2000 ரூபாய் வரை கூப்பன் தள்ளுபடியும் இருக்கும்.

ப்ரோ வேரியண்ட் விலை
ரூ.57,999க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ப்ரோ வேரியண்ட், 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. பிளாக் மற்றும் சியான் ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த போன் வருகிறது. அறிமுகச் சலுகையாக, ஐசிஐசிஐ வங்கியில் ரூ. 8000 தள்ளுபடியும் ரூ. 2000 கூப்பன் தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது.

இந்த இரண்டு போன்களும் ஜூலை 20 முதல் Amazon Prime Day விற்பனையில் கிடைக்கும். இந்த சலுகைகள் ஜூலை 20-21 வரை மட்டுமே செல்லுபடியாகும்.

Honor 200 5G சிறப்பம்சங்கள்
 6.7 இன்ச் AMOLED Quad Curved display கொண்ட இந்த ஸ்மார்ட்போனில்  120Hz புதுப்பிப்பு விகிதம், பிக்சல் ரெசல்யூசன் 2664 X 1200 மற்றும் உச்ச பிரகாசம் 4000 nits என்ற அளவில் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் Snapdragon 7 Gen 3 செயலி உள்ளது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையில் AI மூலம் இயங்கும் MagicOS 8.0 கொண்ட போன் இது.

புகைப்படம் எடுப்பதற்கு, ஃபோனின் பின்புறத்தில் OIS ஆதரவுடன் 50MP பிரதான கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் பின்புறத்தில் கிடைக்கிறது. தவிர, 12எம்பி அல்ட்ரா வைட் மற்றும் மேக்ரோ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிமற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, ஃபோனின் முன்பக்கத்தில் 50எம்பி போர்ட்ரெய்ட் செல்ஃபி கேமரா உள்ளது.

பேட்டரி
Honor இன் இந்த 5G ஸ்மார்ட்போனில் 5200mah பேட்டரி உள்ளது. இது 100W வயர்டு ஹானர் சூப்பர் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது WIFI: 2.4G/5GHz, புளூடூத் 5.3, USB வகை-C மற்றும் இரட்டை சிம் ஸ்லாட்டுகளைக் கொண்டுள்ளது. ஃபோனில் 512ஜிபி வரை உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் 12ஜிபி ரேம் வரை உள்ளது.

Honor 200 Pro 5G அம்சங்கள்
ப்ரோ வேரியண்ட் 6.8-இன்ச் முழு HD+ வளைந்த OLED டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 4000nits உச்ச பிரகாசம். Qualcomm Snapdragon 8s Gen 3 SoC ஆகியவை கொண்ட ஹானர் ஸ்மார்ட்போன் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை சேமிப்பகத்துடன் வருகிறது. இந்த போனில் 5200mAh பேட்டரி உள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் செய்துக் கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.