அமேசானில் 10,000 ரூபாயில் அசத்தல் போன்கள்… சான்ஸை மிஸ் பண்ணாதீங்க..!!

அமேசானில் அவ்வப்போது வெளியிடப்படும் ஆஃபர்களில் பல சாதனங்களை மலிவு விலையில் வாங்கலாம். 6ஜிபி ரேம் கொண்ட பல ஸ்மார்ட்போன்கள் ரூ.10,000க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு நோ காஸ்ட் EMI வசதியுடன் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கும். பண பரிவர்த்தனையில், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தும் போது அதற்கான தள்ளுபடிகள் கிடைக்கும். 

அமேசான் நிறுவனம் வருடத்திற்கு ஒருமுறை அமேசான் பிரைம் டே தினத்தில், விற்பனை சலுகைகளை அறிவிக்கும். இந்தியாவில் ஜூலை 20-ஆம் தேதி அன்று, அமேசான் பிரைம் டே சேல் தொடங்கவுள்ளது.  ஜூலை 20 மற்றும் ஜூலை 21 ஆகிய தினங்களில் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் அனைத்தும் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். தற்போது, அமேசானில் தற்போது எந்த விற்பனையும் நடைபெறவில்லை என்றாலும், பல போன்கள் நல்ல சலுகை விலையில் கிடைக்கின்றன. Redmi, Poco மற்றும் Nokia ஆகிய பிராண்டுகளின் சில மாடல் போன்களை சலுகை விலையில் வாங்கலாம். 

அமேசான் பிரைம் டே சேல் என்னும் சலுகை விற்பனையின் (Amazon Prime Day Sale) போது, ​​பிரபலமான பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் கேஜெட்டுகள் ஆகியவற்றை தள்ளுபடி விலையில் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் பிரைம் சந்தா உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அமேசான் பிரைம் டே சலுகை விற்பனையின் பலனை பெற முடியும். இரண்டு நாட்கள் நீடிக்கும்  இந்த சலுகை விற்பனையில் பல விதமான சலுகைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கோ சி65 (POCO C65)

POCO C65 மாடல் ஸ்மார்போன் 8GB வரை ரேம் மற்றும் 256GB வரை உள் சேமிப்பு வசதியை கொண்டுள்ளது. 6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்ட இந்த போனில், MediaTek Helio G85 செயலி உள்ளது.  5000mAh திறன் கொண்ட பேட்டரியுடன், இந்த ஃபோனில் 50MP பிரதான கேமரா உள்ளது. மேலும், இதில் 8MP செல்பி கேமரா உள்ளது. ஆண்ட்ராய்டு 13  ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் ஆரம்ப விலை 6,999 ரூபாய். 339 ரூபாய் மாதாந்திர தவணையில் இந்த ஃபோனை வாங்கலாம்.

ரெட்மி 12 (Redmi 12)

ரெட்மி 12 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் சேமிப்பு வசதி உள்ளது. மேலும் இதில் ஃபுல் HD+ டிஸ்ப்ளே உள்ளது. Mediatek Helio G88 Octa-core செயலியுடன் வரும்இந்த போனில் 50MP AI டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. 5000mAh பேட்டரி உள்ள இந்த ஸ்மார்போன்,  22W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. போனின் விலை ரூ.9,999. அமேசான் தளத்திலிருந்து இந்த ஃபோனை வாங்க 1000 ரூபாய் கூப்பன் தள்ளுபடி கிடைக்கும். மேலும்,  மாதத் தவணையில் 485 ரூபாய்க்கு வாங்கலாம். 

நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G)

நோக்கியா G42 5G போனில் Snapdragon 480 Plus 5G செயலி உள்ளது. 50எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வரும் இந்த போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரை உள் சேமிப்பு வசதி உள்ளது. இதில் 2ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆப்ஷனும் உள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போனில், 3 நாட்களுக்கு நீடிக்கும் திறன் கொண்ட பேட்டரி உள்ளது. போனின் ஆரம்ப விலை ரூ.9,999.  HDFC வங்கி கார்டுகளுக்கு 1250 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இந்த போனை மாதத் தவணையில் ரூ.485க்கு வாங்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.