மழை காலத்தில் ஸ்மார்போனை பாதுகாக்க… செய்ய வேண்டியதும்… செய்யக் கூடாததும்..!!

மழை காலம் வெயில் காலத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் சிறந்த பருவம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், கூடவே, கோடை காலத்திற்கு சமமான சிக்கல்களும் உள்ளது. மழை ரசிக்க தகுந்ததாக இருந்தாலும் துணிகளை துவைப்பது, காயவைப்பது என்பது முதல் மழைக் கால நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்வது என பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். இந்த லிஸ்டில் நம் ஸ்மார்ட்போன்களும் அடக்கம்.

மழைகாலத்தில் ஸ்மார்போனை பாதுகாப்பதென்பது குழந்தையை பாதுகாப்பது போன்றது. ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்பதால், மழை காலங்களில் ஸ்மார்ட் போனை வீட்டிலேயே விட்டுவிட்டு செல்ல முடியாது. தொலைபேசி எண்கள், அலுவலக ஆவணங்கள், பல முக்கிய கோப்புகள், போட்டோக்கள் என அனைத்தையும் கொண்டுள்ள பொக்கிஷமாக இருக்கும்  ஸ்மார்ட்போனை விட்டு விலகுவது என்பது முடியாத காரியம்.

மழை உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற கேஜெட்டுகளுக்கு பெரும் அச்சுறுத்தலைக் கொண்டு வரும் நிலையில், கவனக்குறைவாக இருந்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். மழைக்காலத்தில் உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட்களை எவ்வாறு பத்திரமாக பாதுகாப்பது என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.

மழை நீரிலிருந்து கேட்ஜெட்டுஜ்கள் மற்றும் ஸ்மார்போன்களை பாதுகாக்க செய்ய வேண்டியவை

1. உங்கள் இயர் போன்போன்ற கேஜெட்கள் அல்லது ஸ்மார்ட்ஃபோனை தண்ணீரில் நனையாமல் பாதுகாப்பாக வைத்திருக்க, மழை காலங்களில் தண்ணீர் உள்ளே நுழையாமல் இருக்க உதவும் வாட்டர் புரூப் மொபைல் கேஸ்களை பயன்படுத்தலாம். இதனால், போன் நனையாமல் இருப்பதோடு, போன் கீழே விழுந்தாலும் கீரல் விழாமல் இருக்கும். எனவே, நீங்கள் வெளியே செல்லும், அவற்றை நீர்ப்புகா பை அல்லது பிளாஸ்டிக் ஜிப் லாக் பையில் வைத்து எடுத்துச் செல்லவும்.

2. மழையின் போது, முடிந்தவரை போன்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். எதிர்பாராத விதமாக அதிக மழைநீர் போனுக்குள் சென்று விட்டால், போன் முற்றிலுமாக பழுதடைய வாய்ப்பு அதிகம். மிக அவசியமான சமயங்களில் மழை பாதிக்காத  வகையில் பயன்படுத்துங்கள்.

3. ஈரமான கைகளுடன் ஸ்மார்போன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கைகள் ஈரமாக இருக்கும்போது பிடிமானம் இல்லாமல் போன் கீழே  விழும் வாய்ப்பும் அதிகம். அதோடு கைகளில் இருக்கும் நீர், ஸ்மார்போனில் அல்லது கேட்ஜெட்டில் புகுந்தால், அவை  பழுதடைந்து விடும்.

மழையில் போன்கள் ஈரமாகிவிட்டால் செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்:

1. தவிர்க்க முடியாத வகையில் போன்கள் மழையில் நனைந்து விட்டால் உடனடியாக சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் போனுக்கு அதிகம் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கலாம். 

2. மழை நீரில் நனைந்த அல்லது தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக ஆஃப் செய்யவும். போனில் உட்புறத்தில் தண்ணீர் செல்வதால் ஏற்படும் மின்சார அதிர்ச்சியைத் தடுக்கும். மேலும் போன் ஈரமாக இருக்கும் போது அது, செயல்படுகிறதா என்று சோதிக்க முயற்சிப்பது, மேலும் சேதத்தை ஏற்படுத்தும்.

3.  மழையில் நனைந்த போனின் உள்ளே போடப்பட்டிருக்கும் சிம் கார்டு, மெமரி கார்டு ஆகியவற்றையும் அகற்ற வேண்டும்.

4. போனில் உள்ள ஈரத்தை உலர்த்த ஹேர் ட்ரையர்கள், ஓவன்கள் அல்லது மைக்ரோவேவ்களை பயன்படுத்த கூடாது. இது பழுது பார்க முடியாத அளவிற்கு சேதத்தை எற்படுத்தும்.

5. அரிசி அல்லது சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளைப் பயன்படுத்துவது, சாதனத்திலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. குறைந்தது 24 முதல் 48 மணிநேரம் வரை அரிசி அல்லது சிலிக்கா ஜேல்லில் வைப்பதால், ஈரப்பதத்தை வெளியேற்ற உதவும்.

6. இவற்றுக்கு பிறகும் போன் இயங்கவில்லை என்றால், அங்கீகரிக்கப்பட்ட சேவை மையம் அல்லது சரிசெய்வதில் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநரை அணுகவும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.