வாட்ஸ்அப் அப்டேட் ஒன்று தற்போது அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. வாட்ஸ்அப் அதன் புதிய அப்டேட்டில் அனைவரும் விரும்பும் நல்ல அம்சத்தை சேர்த்துள்ளது. இந்த அப்டேட்டை மேம்படுத்தும்போது, வாட்ஸ்அப் பயனர்கள் புகைப்படத்தை பகிரும்போது அது தொடர்பான தலைப்பையும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிற்கும் வந்துள்ளது. அதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
இன்று செய்தி தொடர்பு மிகவும் வசதியானதாக மாறிவிட்டதற்கு காரணம் வாட்ஸ்அப் போன்ற உடனடி செய்தியிடல் செயலிகள் தான். அனைவரிடமும் பிரபலமான வாட்ஸ்அப், தனது பயனர்களுக்கு ஒரு புதுப்பிப்பைக் கொண்டு வந்துள்ளது. புதிய அப்டேட்டில் நல்லதொரு அம்சம் என்று அனைவராலும் பாராட்டப்படும் இந்த அப்டேட்டில், பயனர்கள் புகைப்படத்தையும் அதன் தலைப்பையும் பகிர்ந்து கொள்ளலாம்.
புதிய அப்டேட் பதிவிறக்கம்
வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய அப்டேட்டை பதிவிறக்க விரும்பினால், கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இருப்பினும், இந்த புதுப்பிப்பு ஒரே நேரத்தில் அனைத்து பயனர்களுக்கும் கிடைப்பதற்கு சிறிது காலம் பிடிக்கலாம். வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த சிறப்பு அம்சத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.
வாட்ஸ்அப் அப்டேட் சிறப்பு அம்சங்கள்
நீங்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்த விரும்பினால், அதற்கு முதலில், சமீபத்திய வாட்ஸ்அப் (WhatsApp) பதிப்பை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவ வேண்டும். அதன்பிறகு, உங்கள் கணக்கில் புதியதாக பதிவிறக்கப்பட்ட இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். நீங்கள் இந்தப் புதுப்பிப்பைப் பெற்றிருந்தால், புகைப்படத்துடன் தலைப்பைப் பகிரலாம்.
அதற்கான செயல்முறையை படிப்படியாக தெரிந்துக் கொள்வோம்
1. முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பை திறக்கவும்.
2. உங்களுடன் புகைப்படத்தைப் பகிர்ந்த நபரின் சேட்டிங் பக்கத்திற்கு செல்லவும்.
3. புகைப்படத்தை நீண்ட நேரம் அழுத்திப் பிடித்து வைக்கவும், பின்னர் send (செண்ட்) என்ற அனுப்பும் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
4. இப்போது புகைப்படத்தைப் பகிர விரும்பும் நபர்களைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இங்கே புகைப்படத்தையும் அதன் தலைப்பையும் பார்க்கலாம்.
6. அனுப்பு பொத்தானைக் கிளிக் செய்யவும். புகைப்படத்துடன் தலைப்பை அனுப்ப விரும்பவில்லை என்றால், தலைப்பின் மேல் வலதுபுறத்தில் உள்ள ‘x’ பொத்தானைக் கிளிக் செய்யவும்.
7. வேறு தலைப்பையும் எழுத விரும்பினால், அதனையும் இதில் சேர்க்கலாம்.
8. ‘x’ பொத்தானைக் கிளிக் செய்து, நீங்கல் எழுத விரும்பிய தலைப்பை சுருக்கமாக எழுதவும்.