ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 24.5% குறைந்துள்ளது. இந்த சரிவானது தேவை சரிவின் மத்தியில் கண்டுள்ளது. மேற்கொண்டு இந்த நிறுவனத்தின் பங்கு விலையில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இனி எப்படி இருக்கும்? தற்போதைய நிலவரம் என்ன? தரகு நிறுவனங்கள் பலவும் பெயிண்ட் நிறுவனத்தின் இலக்கு விலையை குறைத்துள்ளன. இந்த சூழலில் பெயிண்ட் பங்கை வாங்கலாமா? டெக்னிக்கலாக பங்கு எப்படி இருக்கிறது? கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் என்ன? என பல கேள்விகள் பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
நிதி நிலவரம்?
இந்தியாவின் மிகப்பெரிய பெயிண்ட் விற்பனையாளரான ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 1170 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இந்த லாபம் கடந்த ஆண்டில் 1550 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர விற்பனையானது 2.3% குறைந்து, 8,970 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது. பெயிண்ட் நிறுவனம் முன்னதாக விலை குறைப்பு செய்த நிலையில், அதன் வருவாய் வளர்ச்சியானது பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரி, வட்டி மற்றும் தேய்மானத்திற்கு முந்தைய லாப விகிதமானது கிட்டத்தட்ட 20% சரிவைக் கண்டு, 1887 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஏன் சரிவு?
கடந்த ஜூன் காலாண்டில் சரிவை கண்டிருந்தாலும் எத்தியோப்பியா மற்றும் இலங்கையில் படிப்படியாக தேவை மீண்டு வருவதை சுட்டிக் காட்டியுள்ளது. இதே மிகப்பெரிய பொருளாதார நாடுகளான நேபாளம், பங்களாதேஷ் மற்றும் எகிப்து போன்ற முக்கிய சந்தைகளில் கூட சில சவால்கள் நிலவி வருகிறது. மொத்தத்தில் ஒட்டுமொத்த சர்வதேச சந்தை வளர்ச்சியிலும் பாதிப்பு இருந்து வருகிறது.
ஜூன் காலாண்டில் இந்தியாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் மற்றும் அதிகப்படியான வெப்பநிலை என்பது தேவையில் பாதிப்பை ஏற்படுத்தியது. எப்படி இருப்பினும் அலங்கார பெயிண்ட்கள் விற்பனையில் 7% வளர்ச்சி கண்டுள்ளது, வளர்ச்சிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. கிராமப்புற சந்தைகளில் 3% சரிவைக் கண்டுள்ள நிலையில், விலை குறைப்பு மேற்கொண்டு வருவாய் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விலையேற்றமும் சவால்?
மேற்கொண்டு மூலதன பொருள்களில் நிலவி வரும் விலை ஏற்றமும் மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு சப்ளையில் நிலவிய சவால்கள் மேலும் வளர்ச்சியை பாதித்துள்ளது. தொழில்துறை பிரிவில் எதிர்பார்ப்பை காட்டிலும் சற்று சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ள நிறுவனம், அப்பிரிவில் 5.8% வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக வாகனங்களுக்கான பெயிண்ட்கள் மற்றும் பவுடர் கோட்டிங் பிரிவு உட்பட சில பிரிவுகள் வலுவான வளர்ச்சியை கண்டுள்ளன.
தேவை அதிகரிப்பு?
வரவிருக்கும் காலத்தில் கிராமப்புற பகுதிகளில் தேவையானது மீண்டு வரலாம் என நம்பப்படுகிறது. தொடர்ந்து கிராமப்புறங்களில் பருவ மழை சரியான காலகட்டத்தில் பெய்து வருவது வளர்ச்சிக்கு ஆதரவாக அமையலாம். இது படிப்படியாக தேவை அதிகரிக்க வழிவகுக்கலாம். இதற்கிடையில் நிறுவனம் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மக்களை கவரும் விதமாக பல்வேறு பிரிவுகளில் கவனம் செலுத்தி வருகிறது. இது மேற்கொண்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
தரகு நிறுவன கருத்து?
மோதிலால் ஆஸ்வால் தரகு நிறுவனமானது ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் ரேட்டிங்கை நியூட்ரல் என மாற்றம் செய்துள்ளது. அதன் இலக்கு விலையை 3150 ரூபாயாகவும் கொடுத்துள்ளது.
நிறுவனம் 30% சந்தை பங்கை நடுத்தர காலத்தில் கைபற்றுவதை இலக்காக கொண்டுள்ளது. எனினும் தொடர்ந்து போட்டிகள் அதிகரித்து வருவது வளர்ச்சிக்கு எதிராக அமையலாம். எனினும் நிறுவனம் வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து புதிய புதிய பொருள்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. எப்படி இருப்பினும் நடப்பு நிதியாண்டில் பெயிண்ட் துறையானது கவனத்தில் கொள்ள வேண்டிய துறைகளில் ஒன்று என்றும் கூறியுள்ளது.
இதற்கிடையில் பெயிண்ட் பங்கில் சரிவு இருக்கலாம். தொடர்ந்து வருவாய் வளர்ச்சி சரிவைக் காணும் பட்சத்தில், அது மேற்கொண்டு பங்கு விலையில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆக ஏசியன் பெயிண்ட் நிறுவன பங்கானது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று எனவும் சுட்டிக் காட்டியுள்ளது.
கோல்ட்மேன் சாச்ஸ்
சர்வதேச தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவன பங்கின் இலக்கு விலையை குறைத்து, 2750 ரூபாய் என வைத்துள்ளது. எனினும் பங்கின் ரேட்டிங்கை மாற்றம் செய்யாமல் நியூட்ரல் என கொடுத்துள்ளது. இது எபிடா விகிதம் முதல் காலாண்டில் சரிவைக் கண்டுள்ள நிலையில், நிறுவனம் தொடர்ந்து அடுத்து வரும் காலாண்டுகளிலும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளலாம். இது மேற்கொண்டு பெயிண்ட் பங்கிலும் சரிவைக் காண வழிவகுக்கலாம். தொடர்ந்து அதிகரித்து வரும் போட்டி மேற்கொண்டு நிறுவனத்திற்கு மற்றொரு மிகப்பெரிய சவால் என கூறியுள்ள தரகு நிறுவனம், நிச்சயம் வருவாய் வளர்ச்சியில் கணிசமான சரிவு இருக்கலாம் என சுட்டிக் காட்டியுள்ளது.
பங்கு விலை நிலவரம்?
மற்றொரு தரகு நிறுவனமான ஜேபி மார்கனும் நியூட்ரல் என ரேட்டிங் கொடுத்துள்ளது. எனினும் இலக்கு விலையை 2870 ரூபாயில் இருந்து 2800 ரூபாயாக குறைத்துள்ளது. இது பெயிண்ட் நிறுவனம் வளர்ச்சியில் சரிவைக் கண்டுள்ள நிலையில் சுட்டிக் காட்டியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி ( ஜூலை 18) ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவன பங்கு விலையானது. 2% மேல் குறைந்து, 2902 ரூபாயாக காணப்படுகிறது. இப்பங்கின் 52 வார உச்ச விலை 3,568 ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலை 2670.10 ரூபாயாகும்.
டெக்னிக்கலாக பார்க்கும்போது தினசரி மற்றும் வார சார்ட் பேட்டர்னில் சற்று அழுத்தத்தை காணலாம் எனும் விதமாக காணப்படுகிறது. முக்கிய பிரேக் அவுட் விலையான 2977.30 ரூபாய்க்கு கீழ், தினசரி முடிவு அடிப்படையில் கீழாக காணப்படுகிறது. மூவிங் ஆவரேஜ்களை பார்க்கும்போது 50 நாள் மற்றும் 100 நாள் ஆவரேஜ்களுக்கு மேலாகவும், 5 நாள், 10 நாள், 20 நாள், 200 நாள் ஆவரேஜ்-களுக்கு கீழ் காணப்படுகிறது. மேற்கொண்டு செல்லிங் அழுத்தத்தை உறுதிப்படுத்தும் விதமாக, வால்யூமும் வலுவாக காணப்படுகிறது.
இப்பங்கானது கடந்த 1 வாரத்தில் 4% சரிவிலும், 1 மாதத்தில் 1% சரிவிலும், 3 மாதத்தில் 3% சரிவிலும், நடப்பு ஆண்டில் இதுவரையில் 15% சரிவிலும், 1 வருடத்தில் 17% சரிவிலும், 3 ஆண்டுகளில் 3% சரிவிலும் காணப்படுகிறது. இது மேற்கோண்டு இன்னும் குறுகிய காலத்திற்கு சரிவைக் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சிறு முதலீட்டாளர்கள் கவமுடன் செயல்படுவது அவசியம்.
Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters
Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.
General Disclaimer and Terms & Conditions of the research report
INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL +
THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.
One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
முதலீடு செய்வதற்கு முன்னால் ஒரு செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரிடம் கலந்தாலோசித்த பின்னரே செய்ய வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காக காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் வாங்குவது லாபகரமாக இருக்கும்.