‘’உறுமய’’ அளிப்புப் பத்திரம் தொடர்பான சிக்கலகள் காணப்பட்டால் தெரியப்படுத்துக

உறுமய வேலைத்திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் அளிப்புப் பத்திரம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை அல்லது சிக்கல் அல்லது அது தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம் என காணி ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே இதனைக் குறிப்பிட்டார்.

அதன்படி, சகல சிக்கல்கள் தொடர்பாகவும் 0112 883812இ 0112 883635இ 0112 797400இ 0112 865824 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து அல்லது 0112 864051 என்ற பெக்ஸ் இலக்கத்திற்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.

நிபந்தனைகளுடன் அரசின் அனுமதி மற்றும் கொடுப்பனவுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ள 20 இலட்சம் குடும்பங்களுக்குத் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவினால் 2024 வரவுசெலவுத் திட்டத்திற்காக இலக்கம் 08 இன் கீழ் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சம்பந்தமாக நடைமுறைப்படுத்தப்படும் உறுமய வேலைத்திட்டத்திற்கு இணங்க அளிப்புப் பத்திர அதிகாரத்துடனான நிரந்தர அளிப்புப் பத்திர உரிமை கிடைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.