குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குதல் என்பது மிகவும் பெறுமதியான மூலதனம் என்றும் அது குழந்தையின் சுகாதாரத்திற்கு மிகவும் சாதாரணமான மற்றும் போஷாக்கை கையால் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய சிறந்த விடயம் என யுனிசெப் அமைப்பின் சுகாதார மற்றும் போஷாக்கு அதிகாரி சமூக சுகாதார விசேட வைத்தியர் தம்மிகா ரொவேல் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் தேசிய தாய்ப்பால் வழங்கும் வாரத்தை முன்னிட்டு தாய்ப்பால் வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக நேற்று முன்தினம் (17)இடம்பெற்ற செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே சமூக சுகாதார விசேட வைத்தியர் குறிப்பிட்டார்.
குழந்தை ஒன்றின் பிறப்பிலிருந்தே முதல் ஒரு மணித்தியாலத்தில் தாய்ப்பால் தாய்ப்பால் வழங்குவதை ஆரம்பிப்பதுடன், முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மாத்திரம் வழங்குவதும் குழந்தைக்கு இரண்டு அல்லது அதை விடக் கூடிய வருட காலங்கள் மேலதிக உணவுகளுடன் தாய்ப்பால் வழங்குவதன் ஊடாக குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பாரிய செல்வாக்கு செலுத்தப்படுவதாக சுட்டி காட்டினார்.
அவ்வாறே குழந்தையின் மூளை வளர்ச்சியினால் அவர்கள் சிறந்த பேச்சு வினைத்திறனான பிரஜையாக உருவாக்கப்படுவதாகவும், அவ்வாறான வினைத்திறனான நபர்கள் நாட்டில் இருப்பதனால் பாரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதாக வைத்தியர் வலியுறுத்தினார்.
சரியாக தாய்ப்பால் வழங்குவதன் ஊடாக வருடத்திற்கு தாய் மரணத்தை ஒரு லட்சத்தை விட குறைக்கக் கூடியதாகவும், இதனால் பெண்களுக்கு பாரியளவில் ஏற்படும் மார்புப் புற்று நோய், கர்ப்பப்பை புற்று நோய், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க கூடியதாக இருக்கும், அதனால் ஏற்படும் மரணத்தை குறைக்க கூடியதாக இருக்கும் என்றும் விவரித்தார்.
சிறுவர் மரணம் ஆறு இலட்சத்தை விடக் குறைக்கக் கூடியதாக இருக்கும் எனக் குறிப்பிட்ட சமூக சுகாதார விசேட வைத்தியர் தம்மிகா; தாய்ப்பால் வழங்கும் ஆர்வத்தை முன்னேற்றுவதற்கு சுகாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய செலவை 340 பில்லியன் ரூபாவை விட அதிகம் மீதப்படுத்திக் கொள்ளலாம் என்றும் சுட்டிக்காட்டினார்,