புதுடெல்லி: திரிபுரா மாநிலத்திலுள்ள மேற்கு திரிபுரா மாவட்டம் ரான்குடியா பகுதியில் நேற்று தொழிலாளர்கள் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பள்ளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
தகவல் அறிந்து வந்த போலீஸார் பள்ளத்தில் இருந்து மொத்தம் 27 வெடிகுண்டுகளை கண்டெடுத்தனர். அவை 1971 வங்கதேசப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் எனத் தெரிகிறது.
வங்கதேச சுதந்திரப் போராட்ட முக்தி பாஹிணி அமைப்பினர் இந்த வெடிகுண்டுகளை இங்கு புதைத்து வைத்திருக்கலாம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
போலீஸ் அதிகாரி அனந்த தாஸ்கூறும்போது, “இந்த வெடிகுண்டு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்று தெரியவில்லை. வெடிகுண்டுகளின் மேல் இருந்த லேபிள்கள் அழிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.