2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட தயாராகும் ஹீரோ வீடா

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வீடா எலக்ட்ரிக் பிராண்டில் நடப்பு நிதியாண்டில் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வெளியிட உள்ளது. தற்போது V1Pro, V1 Plus என இரண்டு ஸ்கூட்டர்கள் விற்பனையில் உள்ள நிலையில் அடுத்து வரவுள்ள இரண்டு மாடல்களில் ஒன்று மிகக் குறைவானதாக ரூபாய் ஒரு லட்சத்திற்குள் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

Hero Vida EScooter

ஹீரோ நிறுவனம் இந்திய அரசின் PLI (Production Linked Incentive) திட்டத்தின் சலுகைகளை பெறுவதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில், ரூ.1 லட்சம் விலைக்கு குறைவாக வெளியிட உள்ள இ-ஸ்கூட்டர் 80 முதல் 100 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தலாம்.

நடப்பு நிதி ஆண்டில் இரண்டு வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் 2025-2026 ஆம் தேதி ஆண்டுக்குள் வீடா எலக்ட்ரிக் வரிசையில் ஆறு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மற்றும் ஜீரோ மோட்டார் சைக்கிளுடன் இணைந்து 4 மோட்டார் சைக்கிள்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிரஞ்சன் குப்தா, நிறுவனத்தின் ஆண்டறிக்கையில், “வேகம், அளவுகோல், ஒருங்கிணைவு மற்றும் எளிமைப்படுத்தல் (Speed, Scale, Synergy, and Simplification) ஆகிய எங்களின் 4S மந்திரத்தால் நாங்கள் முன்னேறி வருகிறோம் என குறிப்பிட்டார்.

Hero 2.0 ஸ்டோர்களாகவும் மேம்படுத்தி, Premia அவுட்லெட்களைத் திறந்துள்ளது. 400 நாட்களுக்குள் 400க்கும் மேற்பட்ட கடைகளை மேம்படுத்தியுள்ளது.

வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஜூம் 125ஆர், ஜூம் 160 மேக்ஸி ஸ்டைல் மற்றும் புதிய எக்ஸ்பல்ஸ் 210 அட்வென்ச்சர் ஆகியவற்றை வெளியிட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.