சந்தையில் கிடைக்கின்ற மூன்று கதவுகளை கொண்ட தார் எஸ்யூவி காரின் அடிப்படையில் தார் ராக்ஸ் (THAR ROXX) என்ற பெயரினை மஹிந்திரா சூட்டியுள்ளது. முன்பாக அர்மடா என்ற பெயரை எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்ட ராக்ஸ் பெயருடன் டீசரும் வெளியிடப்பட்டிருக்கின்றது.
Mahindra Thar ROXX
குறிப்பாக தற்பொழுது உள்ள மூன்று கதவுகளை கொண்ட தார் மாடல்களை விட அதிநவீன வசதிகளும் பல்வேறு சிறப்பம்சங்களையும் பெற உள்ள இந்த மாடலானது பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனையும் பெறவுள்ளது.
RWD மாடல்களுக்கு 1.5 லிட்டர் டீசல் என்ஜின், AWD வேரியண்டுகளுக்கு 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் கூடுதலாக 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷனை பெறுவதுடன் மூன்று என்ஜினிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் பெற உள்ளது.
6 ஏர்பேக்குகள் உட்பட லெவல் 2 ADAS பாதுகாப்பு தொகுப்புடன் கூடுதலாக கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் 10.25 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எல்இடி லைட்டுகள், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் மாறுபட்ட டிசைன் பெற்ற அலாய் வீல் கொண்டிருக்கலாம்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள மஹிந்திரா தார் ராக்ஸ்க்கு போட்டியாக ஃபோர்ஸ் கூர்க்கா, மாருதி சுசூகி ஜிம்னி உள்ளது.