போன் திருடு போய்விட்டதா… அதில் பதிவாகியுள்ள UPI IDஐ நீக்குவது எப்படி..!

ஸ்மார்ட்போன் திருடு போய் விட்டால், ஏற்படும் பொருள் நஷ்டம் ஒரு புறம் இருக்க, ஸ்மார்போன் என்பதை பர்ஸை போல் பண பரிவர்த்தனைக்காக பயன் படுத்தப்படுவதால், அதில் பதிவாகியுள்ள யுபிஐ ஐடி மூலம், சைபர் மோசடிக்கு பலியாகும் வாய்ப்பு உள்ளது. அது தவிர ஸ்மார்ட் போனில் நமது முக்கியமான ஆவணங்கள், புகைப்படங்கள், வங்கித் தகவல்கள் ஆகியவை இருப்பதால், பாதுக்காப்பு அச்சுறுத்தல் உள்ளது என்பதை மறுக்க இயலாது. 

இந்நிலையில், போன் திருடு போன நிலையில், அதில் பதிவாகியுள்ள உங்கள் UPI ஐடி நீக்குவதால், சைபர் மோசடியில் இருந்து தப்பிக்கலாம். இல்லையெனில் போனை திருடியவர் உங்கள் கணக்கை காலி செய்து விடலாம். இதன் மூலம் நீங்கள் நிதி சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடலாம். 

இன்றைய கால கட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரித்து விட்ட நிலையில், வெளியில் செல்லும் போது பர்ஸுக்கு பதிலாக ஸ்மாட்போனை எடுத்து செல்லும் வழக்கம் உள்ளது. இந்நிலையில், திருடு போன உங்கள் போனில் பதிவாகியுள்ள உங்கள் UPI ஐடியை நீங்களே எப்படி நீக்கலாம் என்பதை அறிந்து கொள்வது பயனுள்ள தகவலாக இருக்கும். உங்கள் போனில் பதிவாகியுள்ள கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் மற்றும் யுபிஐ ஐடி விபரங்களை நீக்க, கீழ்கண்ட வழிமுறையை கடைபிடிக்க வேண்டும்.

ஸ்மார்போனில் பதிவாகியுள்ள யுபிஐ ஐடியை பிளாக் செய்யும் முறை

யுபிஐ பதிவை நீக்க, முதலில் இந்த இரண்டு எண்களில் ஏதேனும் ஒன்றை 02268727374, 08068727374 என்ற எண்ணுக்கு அழைக்கவும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் புகாரைப் பதிவுசெய்யவும். அதில் OTP கேட்கப்படும்போது, ​​சிம் கார்டு மற்றும் சாதனம் தொலைந்து விட்டது என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பிறகு நீங்கள் வாடிக்கையாளர் சேவையுடன் இணைக்கப்படுவீர்கள். இதன் மூலம் உங்கள் ஃபோன் திருடப்பட்ட நிலையில், உடனடியாக போனில் பதிவாகியுள்ள UPI ஐடி உடனடியாக நீக்கலாம்.

PayTM UPI ஐடியை பிளாக் செய்யும் முறை

1. Paytm UPI ஐடியை நீக்க, முதலில் Paytm வங்கியின் உதவி எண் -01204456456ஐ அழைக்கவும்.

2. தொலைபேசி தொலைந்து விட்டது என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

3. இதற்குப் பிறகு, மாற்று எண்ணை (புகார் அளிக்க நீங்கள் பயன்படுத்தும் எண்) உள்ளிடவும். அதன் பிறகு தொலைந்த எண்ணை உள்ளிடவும். 

4. பின்னர், எல்லா சாதனங்களிலிருந்தும் வெளியேறு என்ற விருப்பத்தை இங்கே தேர்ந்தெடுக்கவும்.

5.இதற்குப் பிறகு, Paytm இணையதளத்திற்குச் சென்று 24×7 ஹெல்ப் என்னும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும், இங்கே நீங்கள் Report a Fraud அல்லது Message Us விருப்பத்தைத் என்னும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம்.

6. இதன் பிறகு, போலீஸ் அறிக்கை மற்றும் தேவையான விவரங்களை கொடுக்க வேண்டும். விவரங்களைச் சரிபார்த்த பிறகு, உங்கள் Paytm கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும்.

7. இதேபோல், நீங்கள் பண பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படும் மற்ற கூகுள் பே, போன் பே போன்ற மற்ற செயலிகளில் இருந்தும், யுபிஐ பதிவை நீக்கலாம். இருப்பினும், அதற்கான செயல்முறையும் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

8. UPI ஐடி மற்றும் எண்ணை முடக்கிய பிறகு, கண்டிப்பாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று, ஃபோனை இழந்தது தொடர்பாக FIR பதிவு செய்யுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.