பரமக்குடி எம்.எஸ். அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் ரஜினி (36). இவர் பரமக்குடியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவரின் நண்பர் பாண்டி (31). இவர் பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் நேற்று புதிய உடைகள் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு சென்றுள்ளனர்.
மதுரையில் இருந்து மாலையில் பரமக்குடிக்கு திரும்பி வரும் போது, கமுதக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் ரஜினியின் பேண்ட் பைக்குக்குள் வைத்திருந்த செல்போன் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இதில் ரஜினி மற்றும் அவரது நண்பர் பாண்டி இருவரும் மோட்டார் சைக்கிள் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் ரஜினி என்பவருக்கு வலது பக்க தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்ததில், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த பாண்டிக்கு முகம், முழங்கால் மற்றும் முதுகுப் பகுதிகளில் ரத்த காயங்கள் ஏற்பட்டது. அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து பரமக்குடி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் பேட்டரி வெடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரமக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88