டன்சினன் தொடக்கம் நுவரெலியா வரையிலான பிரதான பாதை மக்கள் பாவனைக்காக…

2024 ஆம் ஆண்டின் 1000 கி.மீ வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் டன்சினன் இருந்து பூண்டுலோயா வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதையானது கார்ப்பட் இடப்பட்டு (20) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர்களுடன் இணைந்து மக்கள் பாவனைக்காக இப்பாதை கையளிக்கப்பட்டது.

 

பல வருட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்டு வந்த 9 கி.மீ வரையிலான குறித்த இப் பாதையானது எனது அமைச்சின் கீழ் 1.3 பில்லியன் ரூபாய் நேரடி நிதி ஒதுக்கீட்டீன் மூலம் , வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கார்ப்பட் இடப்பட்டுள்ளது.

 

இந்த வீதியினை, பாடசாலை மாணவர்கள், மருத்துவ தேவை, மற்றும் பல்வேறு வகையிலான செயற்பாடுகளுக்காக மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

 

குறிப்பாக இந்த வீதியினை புனரமைத்து தருமாறு கடந்த காலங்களில் மக்கள் பல்வேறுபட்ட ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

எனவே தான் இதற்கான நீண்ட தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முகமாக இவ் அபிவிருத்தி வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.