Vidaamuyarchi: தீபாவளிக்கு வருமா `விடாமுயற்சி'? டீசர் ரிலீஸ் எப்போது? ஷூட்டிங் அப்டேட்ஸ்!

அஜர்பைஜான் நாட்டில் நடந்து வந்த அஜித்தின் `விடாமுயற்சி’ படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது. படம் தீபாவளிக்குத் திரைக்கு வருகிறதா, அஜர்பைஜான் ஷெட்டியூலோடு மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதா என கோடம்பாக்கத்தில் விசாரித்தோம்.

அஜித், த்ரிஷா

மகிழ்திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விடாமுயற்சி’. இந்தப் படத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கஸன்ட்ரா, ஆரவ் எனப் பலரும் நடிக்கின்றனர். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஆக்‌ஷனும் எமோஷனும் மின்னும் இந்தக் கதையின் பெரும்பகுதி வெளிநாட்டில் நடக்கிறது. இதற்காகத்தான் மொத்த படக்குழுவும் அஜர்பைஜான் பறந்தது. சுப்ரீம் சுந்தரின் ஸ்டன்ட்டில் ஆக்‌ஷன் காட்சிகளும், சேஸிங் காட்சிகளும் எடுத்துள்ளனர். சேஸிங்கின் போது அஜித்தின் கார் விபத்திற்குள்ளானது கூட வீடியோவாக வெளியானது நினைவிருக்கலாம்.

அஜர்பைஜானில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பாகக் கடந்த சில வாரங்களாக நடந்து வந்த ஷூட்டிங் இப்போது நிறைவடைந்திருக்கிறது. படத்தில் வெளிநாட்டு ஸ்டன்ட் கலைஞர்கள் உட்படப் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இடைவெளியில்தான் அஜித் தன் அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’யின் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டு, ஒரு ஷெட்யூலை முடித்துக் கொடுத்தார்.

அஜர்பைஜான் படப்பிடிப்போடு, பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து புனேயில் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அடுத்த மாதம் மொத்த டீமும் இதற்காக புனே செல்கிறது. அந்தப் படப்பிடிப்போடு மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைகிறது.

அஜித்

திட்டமிட்டபடி ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு முடிவடைந்தால் தீபாவளிக்கு ரிலீஸை எதிர்பார்க்கலாம் என்கின்றனர். இதற்கிடையே அடுத்த மாதம் படத்தின் டீசரை வெளியிடவும் திட்டமிட்டு வருகின்றனர். தவிர, படம் நவம்பரில் கண்டிப்பாகத் திரைக்கும் வரும் என்றும் அதற்கான தேதியும் குறிக்கப்பட்டு விட்டன என்ற பேச்சும் பட வட்டாரத்தில் நிலவுகிறது.

‘விடாமுயற்சி’யின் புனே ஷெட்யூலுக்கு முன்னர், ‘குட் பேட் அக்லி’யின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் மீண்டும் ஹைதராபாத்தில் நடைபெறும் என்கிறார்கள். இரண்டு படங்களில் ஒரே சமயத்தில் நடித்து வரும் அஜித்தின் இந்த வேகம் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023 – Part 01 ஐ காண | https://bit.ly/46h7FAB

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.