ரோகித், விராட் கோலிக்கு கம்பீர் சிரித்துக் கொண்டே கொடுத்த வார்னிங்

Gautam Gambhir Latest News : இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக இன்று பொறுப்பேற்று கொண்டிருக்கும் கவுதம் கம்பீர், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு சிரித்துக் கொண்டே வார்னிங் கொடுத்திருக்கிறார். அவர்கள் இரண்டு பேரும் 2027 ஆம் ஆண்டு நடைபெறும் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பையில் விளையடாலாம், ஆனால் அதற்கு முதலில் இந்த விஷயத்தை செய்ய வேண்டும் என ஒரு முக்கியமான விஷயத்தை செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். 

கவுதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பு

ஜூலை 27 ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிராக நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி இன்று அந்நாட்டுக்கு புறப்பட்டது. அதற்கு முன்பாக இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகும் கவுதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கவுதம் கம்பீர், ” இந்திய அணியை பெருமிதப்படுத்தும் நோக்கோடு தலைமை பயிற்சியாளர் பதவியே ஏற்றிருக்கிறேன். என் முன்னாள் இருக்கும் இந்திய அணி சாதாரணமானது அல்ல. ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அணி, டி20உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் இந்திய அணி.

ரோகித், விராட் கோலி எதிர்காலம்

இவ்ளவு பெரிய இடத்தில் இருக்கும் இந்திய அணி இன்னும் பாக்கி வைத்திருக்கும் விஷயங்களை கட்டாயம் நிறைவேற்றும் வேலை மட்டுமே என்னிடம் பாக்கி இருக்கிறது. அதனை செவ்வென செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பது என்பது தான், அவர்களின் முழு நம்பிக்கையை பெறும் வழி. அதனை கடந்தகாலங்களில் செய்து நல்ல ரிசல்டை பெற்றிருக்கிறேன். விராட் கோலி, ரோகித் சர்மா இன்னும் விளையாட நிறைய கிரிக்கெட்டுகள் இருக்கிறது. அவர்கள் நினைத்தால் 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக விளையாடலாம். ஆனால் ஒரே ஒரு விஷயம் அவர்களின் பிட்னஸ் சரியாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

விராட் கோலி உடனான பிரச்சனை

தொடர்ந்து பேசிய ” விராட் கோலிக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, நாங்கள் இருவரும் நிறைய முறை மொபைலில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறோம். சாட்டிங் செய்திருக்கிறோம். கிரிக்கெட் களத்தில் எங்கள் இருவருக்கும் இடையிலான விஷயத்தை பார்த்து எல்லோரும் கற்பனை செய்து வைத்திருப்பது வேறு. ஆனால் எங்களுக்கு இடையிலான உண்மையான உறவு இதுவரை கேமரா முன் தெரிந்ததில்லை. இனி அது தெரியும் காலம் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். விராட் கோலி மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என உறுதியாக நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை தொடர்

இந்தியா கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் தொடங்க இருக்கிறது. அதில் பங்கேற்க சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி இலங்கை புறப்பட்டுச் சென்றுவிட்டது. டி20 தொடருக்குப் பிறகு நடைபெறும் ஒருநாள் போட்டிக்கு ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் காண இருக்கிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.