வேலை நிறுத்தத்தில் ஈடுபடாதவர்களுக்கு சம்பள உயர்வா? கொடுப்பனவா? – அமைச்சரவை பேச்சாளர் பேராசிரியர் பந்துல குணவர்த்தன

வேலை நிறுத்தத்தில் ஈடுபடாதவர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக அதனை ஒரு தடவை 10,000 கொடுப்பனவாக வழங்குவது என்றும் அதனை திறைசேரியினால் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் வந்துள்ள குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன் போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளர்;

முதல் தடவையாக பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வொன்றை வழங்குவதற்குத் தீர்மானித்து பத்திரம் ஒன்றை சமர்ப்பித்திருந்தாலும், ஜனாதிபதி இதில் பாரிய முரண்பாடுகள் ஏற்படலாம் என சம்பந்தப்பட்ட விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு தெளிவு படுத்தியதன் பின்னர், கடந்த வாரம் இரண்டாவது தீர்மானத்திற்கு வந்தனர்.

அத்துடன் கோரிக்கை விடுக்கும் தொகையை வழங்க முடியாமைக்குக் காரணம் இது எம் யாருடையதாவதோ அல்லது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடையதோ அல்லது எம்முடையதோ பணத்திலிருந்து தருவது அல்ல. அனைத்தும் பொது மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்திக் கொடுப்பனவுகள் அனைத்தும் வழங்கப்படும்.

யாருக்காவது அதிகமாக செலுத்த வேண்டுமாயின் மக்களிடமிருந்து அதிகமாக அறவிட வேண்டும்.

25,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க வேண்டுமாயின் 400 பில்லியன் ரூபாய் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த 400 பில்லியன் ரூபாவுக்கு இலாபம் பெறுவதாயின் 18% ஆன வெற் வரியை 25 வீதமாக அதிகரிக்க வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த அளவு வரிச் சுமையை பொதுமக்களால் தாங்க முடியாது என்று தான் சம்பளத்தை அதிகரிக்கவில்லை.

முடியுமாயின் அவ்வாறு வரியை அதிகரிக்கலாம். எதிர்காலத்திலும் அவ்வாறு செய்ய முடியாது. யாராவது அரசாங்கமாக ஆட்சி செய்வார்களாயின் அரசாங்கமாக நாம் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களுக்கு இணங்க ஒவ்வொரு வருடத்திலும் பாராளுமன்ற சட்டமாக அங்கீகரிக்கப்படும்.

வருடாந்தம் ஆரம்பக் கணக்கில் தலா தேசிய உற்பத்தி 2.3 பற்றாக்குறையுடனே இலங்கை பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை முன் வைக்க வேண்டும்.

அதனால் எப்போதாவது தனக்கு நினைத்தவாறு தனக்கு நினைத்த விதத்தில் அரசாங்க அதிகாரம் ஒன்றைப் பெற்று, ஆட்சி செய்ய முடியாது என்று சுருட்டுக் கடை ஒன்றாவது வைத்திருக்கும் ஒருவருக்குக் கூட எண்ணத் தோன்றும்.

ஏனெனில் நாம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களுக்கு இணங்க அரசாங்கத்திற்கு வேண்டிய அளவு செலவு செய்ய முடியாது.

இந்த வாரம் பாராளுமன்றத்தில் சட்டமொன்று அங்கீகரிக்கப்படும். அதன்படி அரசாங்கத்திற்குத் தேவையான வருமானம் என்பது வருடாந்த தலா தேசிய உற்பத்தியை அண்மிக்க முடியாது.

யாராவது யாருக்கும் தேவையானதைத் தருவதாக வாக்குறுதி வழங்கலாம். ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது. தலா தேசிய உற்பத்தியை நூற்றுக்கு 13 வீதத்தை விட அதிகரிக்க முடியாது.

ஆரம்பக் கணக்கில் தலா தேசிய உற்பத்தி 2.3% அதிருப்தியைக் கொண்டிருக்க வேண்டும். செலவுக் கணக்கில் கூடிய பற்றாக்குறையாக தலா தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு ஒரு வீதத்தை நெருங்க முடியாது.

முழு உலகத்துடனும் இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அரசாங்கத்தை எடுக்க வேண்டும் என நினைக்கும் யாராக இருந்தாலும் எதிர்காலத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெளிவுபடுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.