வீட்டிற்குள் வெடிகுண்டு வெடிக்க வேண்டாம்! கெய்சர் வெடிக்காமல் பாதுகாக்க மழைக்கால எச்சரிக்கை!

மழைக்காலத்தில் கீசரை பயன்படுத்தும்போது செய்யும் சிறிய தவறு கூட மிகப் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். குளிருக்கு இதமாக வெந்நீரில் குளிக்க நினைத்து, வீட்டில் வெடிகுண்டு வெடித்தது போன்ற சேதங்களை ஏற்படுத்திவிடவேண்டாம். மழைக் காலத்தில் தவறுதலாக கூட செய்யக்கூடாத தவறுகள். இவை, வாழ்நாள் முழுக்க பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மழைக்காலத்தில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட கனமழை பெய்து வருகிறது. இந்த பருவத்தில் தண்ணீர் மிகவும் குளிச்சியாக இருக்கும் என்பதால், வெந்நீரில் குளிப்பதற்காக கெய்சர் போன்ற மின்சாதனங்களை வீடுகளில் பொருத்துகிறோம். எந்தவொரு பொருளாக இருந்தாலும் அதற்கான சில வழிமுறைகளை தெரிந்து அதற்கேற்றாற் போல பயன்படுத்துவோம்.

ஆனால், சில சிறிய தவறுகள் பலருக்கும் தெரிவதில்லை. தவறு சிறியதாக இருந்தாலும், அதன் விளைவு மிகப் பெரியதாக பாதிப்பை ஏற்படுத்தும். கீசர் சேதமடையவோ அல்லது வெடிக்கவோ என்ன காரணங்கள் இருக்கலாம் என்பதைத் தெரிந்துக் கொள்வோம். அதோடு, கெய்சரில் ஏற்படும் பிரச்சனைகளையும் தெரிந்துக் கொள்வோம்

கெய்சரில் ஏற்படும் பிரச்சனைகள்

ஷார்ட் சர்க்யூட் ஆபத்து: மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதன் காரணமாக ஷார்ட் சர்க்யூட் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. மின்கம்பிகள் அல்லது கீசரின் இணைப்புகளில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், ஈரப்பதம் காரணமாக ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

துருபிடிக்கும் பிரச்சனை: மழைக்காலத்தில் ஈரப்பதம் காரணமாக, கீசரின் உலோக பாகங்கள் துருப்பிடிக்கக்கூடும், இது மின்சார வாட்டர் ஹீட்டரான கெய்சரின் ஆயுளைக் குறைப்பதோடு அதன் வேலை திறனையும் பாதிக்கிறது.

மின் நுகர்வு செலவை அதிகரிக்கும்: பொதுவாக மழைக்காலத்தில் வெப்பநிலை குறைவாகவே இருக்கும், வெப்பநிலை குறைவாக இருப்பதால், தண்ணீரை வெந்நீராக மாற்றுவதற்கு மின்சாதன கெய்சருக்கு மின்சாரம் அதிகமாக தேவைப்படுகிறது, இதனால் மின் கட்டணம் அதிகரிக்கும்.

நீரின் தரம் கெய்சரை பாதிக்கலாம்: மழை நீரில் அசுத்தங்கள் இருந்தால், அவை கெய்சரின் திறனை பாதிக்கலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கீசரின் வயரிங் சரியாகச் செய்யப்பட்டுள்ளதா என்பதையும், அதில் எந்தத் தவறும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அடிக்கடி கெய்சரை சுத்தம் செய்யவேண்டும். இது, துருப்பிடிக்கும் பிரச்சனையை தவிர்க்க உதவியாக இருக்குக்ம்.

அதேபோல, கெய்சர் வாங்கும்போது, அது தரமான நிறுவனத் தயாரிப்பாக இருக்கட்டும். துரு மற்றும் ஈரப்பதத்தை எதிர்க்கும் நல்ல தரமான கெய்சர் வாங்குவது நல்லது. சில நூறு ரூபாய் வித்தியாசத்தை கணக்குப் பார்த்து, பெரிய ஆபத்தை வாங்க வேண்டாம். 

அதேபோல, கீசரை ஓவர்லோட் செய்யாதீர்கள், அதாவது தொடர்ந்து அதிக நேரம் பயன்படுத்த வேண்டும். நீண்ட நேரம் கெய்சர் பயன்படுத்திக் கொண்டிருந்தால், கெய்சர் விரைவில் சேதமடைந்துவிடும்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.