ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் முதன்மையாக விளங்கி வரும் நிலையில் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மாடலை விற்பனைக்கு வெளியிடுவதற்கு தயாராகி வருகின்றது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதன்முறையாக எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களின் கான்செப்ட் மாடல்களை காட்சிக்கு கொண்டு வந்த நிலையில் இந்நிறுவனம் ஐபிஓ வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றது.
Ola Electric Motorcycle
அதனை முன்னிட்டு மேலும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏதேனும் ஒரு உற்பத்தி நிலை மாடலை காட்சிக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதனால் இந்த டீசர் ஆனது ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள டீசர் மூலம் பேட்டரி மற்றும் பேட்டரியின் கீழ் பகுதியில் எலக்ட்ரிக் மோட்டார் ஆனது பொருத்தப்பட்டு இந்த பேட்டரி ஆனது ட்யூப்லெர் ஃபிரேம் வாயிலாக இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்புற ஸ்பிராக்கெட் ஆனது கொடுக்கப்பட்டு செயின் மூலம் ஃபைனல் டிரைவ்க்கு எடுத்து செல்லப்படுகின்றது. உற்பத்தி நிலை மாடல் அனேகமாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி காட்சிக்கு வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே கார் விற்பனையில் இறங்குவதற்காக காரின் வடிவம் காப்புரிமை பெற்ற படங்கள் வெளியாகிருந்தது. தற்பொழுது கார் விற்பனை பிரிவு சற்று காலம் தள்ளி வைப்பதாகவும் இது அனேகமாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகின்றது முதற்கட்டமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலக்ட்ரிக் பைக்குகள் தொடர்பான சந்தையை விரிவுபடுத்தவே இந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.