இந்திய பேட்மிண்டன் வீரர் வெற்றி!
ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் 21-8 , 22-20 என்ற நேர் செட்களில் குவட்டமாலா வீரர் கெவின் ஜார்டனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்!
இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் வெற்றி!
ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் சிங் 4-0 என்ற நேர் செட்களில் ஜோர்டான் நாட்டு வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்!
மனு பாகெர் அசத்தல்!
பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவின் முதல் சுற்றில் 580 புள்ளிகளோடு மூன்றாமிடம் பிடித்து இந்திய வீராங்கனை மனு பாகெர் பதக்கச்சுற்றுக்கு தகுதிப்பெற்றார். இன்னொரு இந்திய வீராங்கனை ரிதம் சங்வான் 15 வது இடத்தைப் பிடித்து முதல் சுற்றோடு வெளியேறினார்.
‘நூலிழையில் கோட்டைவிட்ட இந்திய வீரர்!’
10 மீ ஏர்பிஸ்டல் ஆண்களுக்கான தகுதிச்சுற்றில் இந்திய வீரர்கள் சர்ப்ஜோத், அர்ஜூன் இருவருமே பதக்கத்திற்கான அடுத்தச்சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியிருக்கின்றனர். மொத்தமாக 33 வீரர்கள் கலந்துகொண்ட இந்தச் சுற்றில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் பதக்கச்சுற்றுக்கு தகுதிப் பெறுவார்கள். சிறப்பாக செயல்பட்ட சரப்ஜோத் 9 வது இடம்பிடித்து நூலிழையில் தகுதிப் பெறுவதற்கான வாய்ப்பை இழந்தார்.
வெல்லுமா இந்தியா?
10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் ஆண்களுக்கான தகுதிச்சுற்றுப் போட்டி இப்போது நடந்து வருகிறது. இந்தியா சார்பில் அர்ஜூன், சரப்ஜோத் என இருவர் இந்தப் போட்டியில் ஆடி வருகின்றனர். 6 சீரிஸ்கள் கொண்ட இந்தப் போட்டியில் மூன்று சீரிஸ்களின் முடிவில் அர்ஜூன் 3 வது இடத்தில் நீடிக்கிறார்.( ஒரு சீரிஸூக்கு 10 முறை வீரர்கள் இலக்கை நோக்கி சுட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.)
பாரிஸ் ஒலிம்பிக்ஸின் முதல் பதக்கம்!
பாரிஸ் ஒலிம்பிக்ஸின் முதல் பதக்கத்தை வென்று அசத்தியிருக்கிறது கஜகஸ்தான். 10 மீ ஏர் ரைபிளின் கலப்பு அணி பிரிவில் இந்தப் பதக்கத்தை கஜகஸ்தான் வென்றிருக்கிறது.
துடுப்புப் படகுப் போட்டியில் நான்காவது இடம்:
சிறப்பாக செயல்பட்ட போதும் துடுப்புப் படகுப் போட்டியில் இந்திய வீரர் பால்ராஜ் பன்வர் 4 வது இடத்தையேப் பிடித்தார். இதனால் நாக் அவுட் சுற்றுக்கு நேரடியாக தகுதிப்பெறும் வாய்ப்பை இழந்திருக்கிறார். இப்போது நாக் அவுட்டுக்கு முன்பாக இன்னொரு சுற்றில் அவர் ஆட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
துப்பாக்கிச்சுடுதலில் ஏமாற்றம்:
10 மீ ஏர் ரைபிள் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் ரமிதா ஜிண்டால், அர்ஜூன் பபுதா கூட்டணி 6 வது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதன் மூலம் வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதிப்பெறும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டது.
இதேபோட்டியில் இளவேனில் வாளறிவன், சந்தீப் சிங் இணை 12 வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்திருக்கிறது.
இன்றைய போட்டி அட்டவணை:
ஜூலை 27, சனிக்கிழமை
பேட்மிண்டன் | ஆண்கள் ஒற்றையர் குரூப் சுற்று (எச் எஸ் பிரணாய், லக்ஷ்யா சென்), பெண்கள் ஒற்றையர் குரூப் சுற்று (பி வி சிந்து), ஆண்கள் இரட்டையர் குரூப் சுற்று (சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் செட்டி), பெண்கள் இரட்டையர் குரூப் சுற்று (தனிஷா கிராஸ்டோ மற்றும் அஸ்வினி பொன்னப்பா) | மதியம் 12 மணி முதல்
துடுப்புப் படகோட்டம் | ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் ஹீட்ஸ் (பல்ராஜ் பன்வார்) | மதியம் 12:30 மணி முதல்
துப்பாக்கி சுடுதல் | 10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி தகுதிச்சுற்று (சந்தீப் சிங், அர்ஜுன் பாபுதா, எலவேனில் வலரிவன், ரமிதா ஜிந்தால்) | மதியம் 12:30 மணி
துப்பாக்கி சுடுதல் | 10மீ ஏர் பிஸ்டல் ஆண்கள் தகுதிச்சுற்று (சரப்ஜோத் சிங், அர்ஜுன் சீமா) | மதியம் 2 மணி
துப்பாக்கி சுடுதல் | 10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி பதக்கச் சுற்றுகள் (தகுதி பெற்றால்) | மதியம் 2 மணி
டென்னிஸ் | முதல் சுற்று போட்டிகள் | ஆண்கள் ஒற்றையர் (சுமித் நாகல்), ஆண்கள் இரட்டையர் (ரோஹன் போபண்ணா மற்றும் என். ஸ்ரீராம் பாலாஜி) | மாலை 3:30 மணி முதல்
துப்பாக்கி சுடுதல் | 10மீ ஏர் பிஸ்டல் பெண்கள் தகுதிச்சுற்று (ரித்தம் சங்வான், மனு பாக்கர்) | மாலை 4 மணி முதல்
டேபிள் டென்னிஸ் | ஆண்கள் ஒற்றையர் (சரத் கமல், ஹர்மீத் தேசாய்) & பெண்கள் ஒற்றையர் (மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா) ஆரம்ப சுற்று | மாலை 6:30 மணி முதல்
குத்துச்சண்டை | பெண்கள் 54கிலோ பிரிவு (ப்ரீத்தி பவார்), ரவுண்ட் ஆஃப் 32 | இரவு 7 மணி முதல்
ஹாக்கி | ஆண்கள் குரூப் பி | இந்தியா vs நியூசிலாந்து | இரவு 9 மணி
கோலாகலமாகத் தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக்ஸ்!
உலகெங்குமுள்ள விளையாட்டு ஆர்வலர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பாரிஸில் தொடங்கியுள்ளன. இந்த நிகழ்வில் 117 இந்திய வீரர்கள் பங்கெடுக்கவுள்ளனர். இந்த முறை இந்தியாவின் பதக்கப் பட்டியல் இரட்டை இலக்கங்களைத் தொடும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!
நாள் 1-இன் முக்கிய நிகழ்வுகள் குறித்த லைவ் அப்டேட்ஸ் இங்கே!