IND vs SL: இரண்டு கைகளாலும் பந்து வீசி அசத்தும் கமிந்து மெண்டிஸ்! வைரல் வீடியோ!

India Tour of Sri Lanka 2024: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சரித் அசலங்கா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான களமிறங்கிய ஷுப்மான் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர் பிளேயில் அபாரமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்க இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. பின்பு பவர் பிளேயின் கடைசி பாலில் கில்லும், அடுத்த பாலில் ஜெய்ஷ்வாலும் அவுட் ஆகி வெளிறினர். பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் சூர்ய குமார் மற்றும் பந்த் சிறப்பாக ஆடினர்.

கமிந்து மெண்டிஸ் பவுலிங்

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் கமிந்து மெண்டிஸ் இரு கைகளாலும் பந்து வீசி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார். பத்தாவது ஓவரில் அறிமுகப்படுத்தப்பட்ட கமிந்து மெண்டிஸ் சூர்யகுமார் யாதவிற்கு இடது கையிலும், ரிஷப் பண்டிற்கு வலது கையிலும் மாறி மாறி பந்து வீசினார். இது மைதானத்தில் இருந்தவர்களையும், டிவியில் பார்த்த அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. முதல் பந்தில் ஒரு பவுண்டரி போனாலும், அந்த ஓவரை சிறப்பாக வீசி இருந்தார் கமிந்து மெண்டிஸ். 

Kamindu Mendis bowling left arm to Suryakumar Yadav and right arm to Rishabh Pant. pic.twitter.com/ZBBvEbfQpS

— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 27, 2024

200+ ரன்களை கடந்த இந்தியா 

சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 58 ரன்கள் அடித்து கேப்டன் இன்னிங்சை விளையாடினார். அதில் எட்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். மறுபுறம் சுமாரான தொடக்கத்தை கொடுத்த பந்த் கடைசியில் அதிரடியாக விளையாடி 49 ரன்கள் விளாசினார். பவர்பிளேயில் 74 ரன்கள் அடித்தது, இந்திய அணிக்கு வலுவான டார்கெட்டை செட் செய்ய உதவியது. 20 ஓவர் முடியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் அடித்தனர். சிறிது கடினமான இலக்கை எதிர்த்து ஆடிய இலங்கை அணியும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். முதல் 8 ஓவர்களுக்கு 84 ரன்கள் அடித்து விக்கெட் இழக்காமல் அதிரடியாக ஆடினர். 

ஆனால் அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்களை கொடுத்து தடுமாறியது. பாத்தும் நிஸ்ஸங்க 48 பந்துகளில் 79 ரன்கள் அடித்தார். அவர் அவுட் ஆனதும் போட்டி இந்தியா பக்கம் திரும்பியது. அக்சர் படேல் சிறப்பாக பந்துவீசி முக்கியமான கட்டத்தில் விக்கெட்களை எடுத்தார். மேலும் 17வது ஓவரை யார் வீசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ரியான் பராக் வீசினார். ஆனால் அந்த ஓவரில் முக்கியமான ஒரு விக்கெட்டை எடுத்து இலங்கை அணியின் வெற்றியை பறித்தார். இறுதியில் இலங்கை அணி 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.