அஸ்வினுக்கே ஆப்பு வைக்கப் பார்த்த வீரர்… ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் – டிஎன்பிஎல் சுவாரஸ்ய வீடியோ!

Mankad Against Ravichandran Ashwin: டிஎன்பிஎல் (TNPL) என்றழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று சேலம் நகரில் கோலாகலமாக தொடங்கியது. சென்னை, கோவை, திருப்பூர், சேலம், மதுரை, திண்டுக்கல், நெல்லை, திருச்சி ஆகிய 8 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் மற்ற 7 அணிகளுடன் தலா 1 போட்டியில் மோதும். 

அதன்படி, லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளில் முதலிரண்டு அணிகள் குவாலிஃபயர் 1 போட்டியிலும், அடுத்த 2 இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியிலும் மோதும். அதன்பின் குவாலிஃபயர் 1 போட்டியில் வெற்றி பெறுவார் நேரடியாக இறுதிப்போட்டிக்கும், தோற்றுப்போகிறவர் குவாலிஃபயர் 2 போட்டிக்கும் தகுதிபெறும். எலிமினேட்டரில் தோற்கும் அணி அப்படியே வெளியேறும், வெற்றிபெறும் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்குச் செல்லும். அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும்.  

பிளே ஆப் சுற்றில் இந்த 4 அணிகள்

நேற்றுடன் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்தது. லைகா கோவை கிங்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், சென்னை சூப்பர் கில்லீஸ் ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் கோவை – திருப்பூர் அணி மோதும் குவாலிஃபயர் 1 போட்டி நாளையும், சென்னை – திண்டுக்கல் அணி மோதும் எலிமினேட்டர் போட்டி நாளை மறுதினமும் நடைபெறுகின்றன. இந்த இரு போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்பிஆர் மைதானத்தில் நடைபெறுகின்றன. குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்றன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின. இதில் திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்து 136 ரன்களை எடுத்தது. அதிபட்சமாக சிவம் சிங் 70 ரன்களையும், அஸ்வின் 15 ரன்களையும் அதிகபட்சமாக அடித்தது. நெல்லை பந்துவீச்சில் சோனு யாதவ் 2 விக்கெட்டுகளையும், கபிலன், ஹரிஷ், சிலம்பரசன், ரோஹன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

அஸ்வினுக்கே ஆப்பா…?

இரண்டாவது பேட்டிங் செய்த நெல்லை அணி 17.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது. அதிகபட்சமாக அருண் கார்த்திக் 45 ரன்களை எடுத்தார். அஜிதேஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று மொத்தம் 43 ரன்களை அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். திண்டுக்கல் அணி ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், நெல்லை அணிக்கு ஆறுதல் வெற்றியே கிடைத்தது எனலாம்.

Ash அண்ணா be like : நீ படிச்ச School-ல நா Headmaster டா!
தொடர்ந்து காணுங்கள் TNPL | Dindigul Dragons vs Nellai Royal Kings | Star Sports தமிழில் மட்டும்#TNPLOnStar #TNPL2024 #NammaOoruNammaGethu @TNPremierLeague pic.twitter.com/fI97alqNJl

— Star Sports Tamil (@StarSportsTamil) July 28, 2024

நேற்றைய போட்டியின்போது சுவாரஸ்ய சம்பவம் ன்றும் நடந்தது. அதில் அஸ்வின் Non-Striker முனையில் நின்றுகொண்டிருந்தார். மோகன் பிரசாத் பந்துவீசினார். அப்போது பிரசாத் பந்துவீசுவதற்கு முன் அஸ்வின் கோட்டை தாண்ட முயன்றார். உடனே பிரசாத் பந்துவீசுவதை நிறுத்திவிட்டு மேன்கட் செய்ய முயன்றார். இருப்பினும் அஸ்வின் முழுமையாக வெளியேறாததால்  அஸ்வினுக்கு வார்னிங் வாங்கிக் கொடுத்தார். 

மேன்கட் சர்ச்சை

இந்த மேன்கட் முறைக்கு அஸ்வின் பேமஸ் என்பதால் அவரையே அவுட்டாக்க முயன்ற மோகன் பிரசாத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அதாவது, வடசென்னை படத்தில் வரும் வசனத்தை போல், “அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்” என்ற ரீதியில் அஸ்வினின் பாணியை பின்பற்றி அவரையே அவுட்டாக்க நினைத்தார் மோகன் பிரசாத். 

அஸ்வின் சர்வதேச போட்டிகளிலும் சரி, ஐபிஎல் போட்டிகளிலும் சரி பலமுறை மான்கட் செய்திருக்கிறார். அதுவும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிக்கொண்டிருந்தபோது அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜாஸ் பட்லரை மான்கட் செய்தது பெரும் சர்ச்சையானது. அப்போது பட்லருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. மேலும் அதன் பின் மான்கட் செய்வது விதிமுறைக்கு உட்பட்ட செயல்தான் என தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.