ஒலிம்பிக் ஹாக்கி : இந்தியா போட்ட கடைசி நிமிட கோல், அர்ஜென்டினா ஷாக்..! திரில்லர் மேட்ச்

Paris Olympics, India vs Argentina News : பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியை கடைசி நேரத்தில் டிரா செய்தது. இரு அணிகளுக்கு இடையே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கோல் அர்ஜென்டினா அடித்திருந்தது. இந்திய ஹாக்கி அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணானது. இதனால் போட்டி மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. ஆட்டம் முடிய சுமார் 2 நிமிடங்கள் இருந்தபோது, இந்திய அணிக்கு பெனால்டி ஷூட் வாய்ப்பு கிடைத்தது. இதனை இந்திய அணி சரியாக பயன்படுத்திக் கொண்டு கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத், அட்டகாசமாக கோல் அடித்தார். 

ஹர்மன்ப்ரீத் அடித்த இந்த கோல் மூலம் தான் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்த ஆட்டத்தை டிராவில் முடிக்க முடிந்தது. குரூப் 2 பிரிவில் இடம்பிடித்திருக்கிற இந்தியா – அர்ஜென்டினா இடையேயான இந்தப்போட்டி தொடங்கியது முதலே விறுவிறுப்பாக சென்றது. போட்டியின் 22வது நிமிடத்தில் தான் முதல் கோல் விழுந்தது. இதனை இந்தியா அடிக்கவில்லை. அர்ஜென்டினா அடித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் லூகாஸ் மார்டின் அற்புதமாக பந்தை அடித்து, அந்த அணிக்கு முதல் கோலை தேடித் தந்தார். இதன்பிறகு இந்திய அணி கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தது. அர்ஜென்டினாவின் தடுப்பு ஆட்டம் சிறப்பாக இருந்ததால், அந்த அணியின் கோல் போஸ்டை இந்திய அணியால் நெருங்க முடியவில்லை. 

கோல் அடிக்க எடுத்த ஒன்றிரண்டு முயற்சிகளும் இந்திய அணிக்கு தோல்விலேயே முடிந்தது. இதனால் இரண்டாவது பாதியில் ஆட்டம் மிகவும் பரபரப்பாக சென்றது. மேலும் ஒரு கோலை அடித்திருந்தால் கூட அர்ஜென்டினாவின் வெற்றி ஊர்ஜிதமாகியிருக்கும். இதனை புரிந்து கொண்ட இந்தியா, கடைசி வரை அந்த அணி இன்னொரு கோலை அடிக்க விடாமல் செய்தது. இந்திய அணியின் தடுப்பு ஆட்டம் சிறப்பாக இருந்ததாலேயே இது சாத்தியமானது. இறுதி வரை இதனை சரியாக செய்ததால் கடைசி நிமிடத்தில் இந்திய ஹாக்கி அணியால் ஆட்டத்தில் அதிக்கம் செலுத்த முடிந்தது. அர்ஜென்டினா அணி இரண்டாம் பாதியில், ஒரு கட்டத்துக்கு மேல் கோல் அடிக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கி, வாய்ப்பு கிடைத்தால் கோல் அடிக்கலாம், இல்லையென்றால் இந்திய அணியை ஒரு கோல்கூட போடாவிடாமல் செய்துவிடலாம் என்ற நிலையில் ஆடியது. 

அந்த அணியின் இந்த யுக்தியை புரிந்து கொண்டு இந்திய அணி ஆடி, கடைசி நிமிடத்தில் கோல் அடித்து தோல்வியடையாமல் ஆட்டத்தை டிரா செய்து பிரமாதமாக முடித்தது. இப்போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ராகுல் டிராவிட் நேரில் கண்டுகளித்து இந்திய ஹாக்கி அணியை உற்சாகப்படுத்தினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.