ஹைட்ரஜனால் இயங்கும் டாக்ஸியில் பறக்கத் தயாரா? சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பறக்கும் டாக்ஸி!

பறக்கும் கார்கள் என்பது அனைவருக்கும் விருப்பமான விஷயம் ஆகும். நீண்ட காலமாக பறக்கும் கார்கள் பற்றி கற்பனை செய்தும் பேசியும் வருவதால், பறக்கும் கார் என்பது அறிவியல் புனைகதை உலகில் அதிகம் பேசப்படும் அம்சமாகவும் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அவை நம் நிஜ வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும் என்று மனிதர்கள் நம்புவது தான்..

இருப்பினும், இப்போது பறக்கும் கார்கள் தொடர்பான கண்டுபிடிப்பு மற்றும் வெற்றிகரமான சோதனைகள் என கற்பனைகள் நனவாகும் காலமும் நெருங்கிக் கொண்டேயிருக்கிறது, பறக்கும் கார்கள் ஒரு கனவாகத் தோன்றவில்லை, ஆனால் அது விரைவில் நிஜமாக மாறும் என்றால் அதற்கு தொழில்நுட்பம் மட்டுமல்ல, ஹைட்ரஜனும் ஒரு காரணமாக இருக்கும்.

ஹைட்ரஜனால் இயங்கும் வாகனம்

பறக்கும் டாக்சி உருவாக்கத்தில் முக்கியமான கட்டத்தில் இருக்கும் தொழில்நுட்பம் என்பது இந்த கற்பனைக்கு ஆறுதல் தரும் ஒரு அம்சமாக இருக்கிறது. அண்மையில், ஒரு பறக்கும் டாக்சி, 561 மைல்கள் (902 கிமீ) பறந்து சாதனை படைத்தது. கலிபோர்னியாவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

ஜாபி ஏவியேஷன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த பறக்கும் கார் ஹைட்ரஜனால் இயக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் இது நீராவியைத் தவிர எந்த உமிழ்வையும் உருவாக்காது.

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சான் டியாகோ, பாஸ்டனிலிருந்து பால்டிமோர் அல்லது நாஷ்வில்லேயிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் வரை விமான நிலையத்திற்குச் செல்லாமல், மாசு உமிழ்வு இல்லாமல் பறக்க முடியும் என்ற கற்பனையை இந்த வாகனம் சாத்தியமாக்கும் என்று பறக்கும் காரைப் பற்றி ஜோபி ஜோபென் பெவிர்ட் கூறுகிறார்.

பறக்கும் டாக்ஸி 
ஹெலிகாப்டரைப் போல செங்குத்தாக தரையிறங்கும் ஆறு ப்ரொப்பல்லர்களால் இயக்கப்படும் ஏர் டாக்ஸிக்கு அமெரிக்க இராணுவத்தின் நிதியும் கணிசமாக கிடைத்துள்ளது. சோதனை அடிப்படையில் பரிசோதித்துப் பார்க்கப்பட்ட பறக்கும் டாக்ஸி புறப்பட்டதும், அதன் ப்ரொப்பல்லர்கள் செங்குத்தாக இருந்து கிடைமட்ட நிலைக்குச் சுழன்றது. இது ஒரு பாரம்பரிய நிலையான இறக்கை விமானத்தைப் போலவே டாக்ஸியை முன்னோக்கி பறக்க அனுமதிக்கிறது.

ஒரு மணி நேரத்திற்கு 200 மைல் (322கிமீ) வேகத்தில் பறக்கும் இந்த டாக்ஸியில் நான்கு பேர் பயணிக்கலாம். இதுபோன்ற ஒரு விமானம் பறக்கவிடப்படுவது இது முதல் முறை அல்ல, ஆனால் இந்த விமானம் தனித்துவமானது, ஏனெனில் இது ஹைட்ரஜனால் இயக்கப்படுகிறது.

இந்த விண்கலம் ஒரு அசல் முழு-எலக்ட்ரிக் விமானத்தின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாகும், ஜோபி என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த டாக்ஸி 25,000 மைல்கள் (40,000 கிமீ) அளவு சோதனை பறப்புகளை செய்துள்ளது.  

மின்சாரம் அல்லது வேறு எரிபொருட்களுக்கு மாற்றாக விமானங்களில் சுத்தமான ஆற்றலை பயன்படுத்த திட்டமிட்ட அவர், ஹைட்ரஜன்-மின்சார சக்தி அமைப்பை தேர்ந்தெடுத்தார். பேட்டரிகள், எரிபொருள் டாங்க் ஆகியவை இந்த காரில் மாற்றப்பட்டுள்ளன.

சுமார் 40kg (88 lbs) திரவ ஹைட்ரஜனை வைத்திருக்கும் டாங்க் பொருத்தப்பட்டுள்ள இந்த பறக்கும் டாக்ஸியில்வெப்பம், மின்சாரம் மற்றும் நீராவியாக மாற்றப்படுகிறது. விமானம் 523 மைல்களை கடந்த பிறகும், அதன் எரிபொருள் இன்னும் 10 சதவீதம் மீதம் இருப்பதாக நிறுவனம் கூறியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.