797 ரூபாய்க்கு 300 நாள் ரீசார்ஜ் திட்டம்… அதிரடி காட்டும் பிஎஸ்என்எல்லின் மலிவு விலை திட்டம்!

தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியிருந்தாலும், பிஎஸ்என்எல்ரீசார்ஜ் திட்டங்களின் விலை குறைவாகவே இருக்கிறது. மலிவான கட்டணத் திட்டங்களுக்கு பெயர் பெற்றது. குறைந்த விலையில் 300 நாட்களுக்கு முழு வேலிடிட்டியை வழங்கும் BSNL இன் அத்தகைய சிறந்த திட்டம் ஒன்றைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பிஎஸ்என்எல் நாட்டின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமாக இருப்பதால், தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களை விலையை அதிகரித்தாலும், BSNL அதன் மலிவான கட்டணத் திட்டங்களின் விலையை உயர்த்தவில்லை. சமீபத்தில், நாட்டின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் கட்டணங்களை அதிகரித்தன.

ரிலையன்ஸ் ஜியோ விலையை உயர்த்தியது. ஜியோவைத் தொடர்ந்து, ஏர்டெல் மற்றும் VI ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்களும் கட்டணத் திட்டங்களின் விலையை அதிகரித்தன. திட்டங்களின் விலைகள் அதிகரித்த பிறகு, மக்கள், அவற்றில் இருந்து விலகி, தங்களின் எண்ணை BSNL க்கு போர்ட் செய்யுமாறு அதாவது மாற்றிக் கொடுக்குமாறு கேட்கத் தொடங்கினார்கள்.

300 நாட்கள் செல்லுபடியாகும் பிஎஸ்என்எல் திட்டம் 

 மொபைல் ரீசார்ஜ் விலை உயர்வை கண்டித்து சமூக ஊடகங்களில் Boycottjio, bsnl ki ghar vapsi போன்ற ஹேஷ்டேக்குகளை டிரெண்டிங் செய்யத் தொடங்கினர். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டணத் திட்ட விலைகள் அதிகரிப்பு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை அதிகரித்துள்ளது.

BSNL மலிவான கட்டணத் திட்டங்களுக்கு பெயர் பெற்றது. குறைந்த விலையில் 300 நாட்களுக்கு முழு வேலிடிட்டியை வழங்கும் BSNL இன் சிறந்த திட்டங்களில் ஒன்றைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். குறைந்த விலையில் நீண்ட கால திட்டத்தை நீங்கள் விரும்பினால், இந்த திட்டம் உங்களுக்கு ஏற்றத் தேர்வாக இருக்கும். 

திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 797 ரூபாய் திட்டத்தில் 300 நாட்கள் அதாவது சுமார் 10 மாதங்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ்ஜ் கிடைக்கும். இந்த திட்டத்தில், முதல் 60 நாட்களுக்கு அதாவது இரண்டு மாதங்களுக்கு வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும். எந்த நெட்வொர்க்கிலும் நீங்கள் விரும்பும் அளவுக்கு இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். முதல் 60 நாட்களுக்கு 100 SMSகளும் கிடைக்கும்.

டேட்டாவைப் பற்றி பேசினால், முதல் 60 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். 60 நாட்களுக்குப் பிறகு, அழைப்பு, எஸ்எம்எஸ் அல்லது டேட்டா பயன்பாட்டிற்கு பயனர் கட்டணம் செலுத்த வேண்டும். சிம்மை நீண்ட காலத்திற்கு செயலில் வைத்திருக்கும் திட்டத்தை விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.