Yogi Babu: “கார்த்திக் சுப்புராஜ் சார் இரண்டு படம் நடிக்க கூப்பிட்டார், ஆனா…!" – யோகி பாபு

கார்த்திக் சுப்புராஜ் சார் இரண்டு படம் நடிக்க கூப்பிட்டார் ஆனால் இயலவில்லை என்று ஆனந்த விகடன் சினிமா விருதுகள் மேடையில் பேசியிருக்கிறார் நகைச்சுவை நடிகர் யோகி பாபு.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு. கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள், கூர்கா, பொம்மைநாயகி, லக்கி மேன், டாக்டர், ஜெயிலர், மாவீரன் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரைப்படத் துறையில் குணச்சித்திர நடிகராகவும், முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். மன்டேலா படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான ‘ஆனந்த விகடன் சினிமா விருதுகள்’ விழாவில் `மாவீரன்’ படத்திற்காக ‘சிறந்த நகைச்சுவை நடிகர்’ விருது அவருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு அந்த விருதை இயக்குநர் சிறுத்தை சிவா வழங்கினார்.

விழா மேடையில் பேசிய யோகி பாபு, ” இது விகடன் எனக்கு வழங்கும் நான்காவது விருது. இந்த விருதைப் பெற காரணமாய் இருந்த மாவீரன் பட இயக்குநர் அருண் விஷ்வாவுக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் மற்றும் எனது தம்பி மடோன் அஸ்வினுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன். கார்த்திக் சுப்புராஜ் சார் அழைத்த இரண்டு படங்களில் நடிக்க முடியவில்லை.

யோகி பாபு

அடுத்து அவருடைய படத்தில் கண்டிப்பாக நடிக்க ஆசைப்படுகிறேன். நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர் நெல்சன், எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் சிறுத்தை சிவா சார் ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று மிகவும் மகிழ்ச்சியாக பேசியிருந்தார். அவரது முழு பேச்சைக் காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.

Karthik Subbaraj sir 2 படம் நடிக்க கூப்பிட்டார்,ஆனா..! – Yogi Babu

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.