சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட 749 கிலோகிராம் உலர் மஞ்சளுடன் இரண்டு 02 சந்தேக நபர்கள் கைது

கடற்படையினரால் (2024 ஜூலை 31) அதிகாலையில் கல்பிட்டி, உச்சமுனே கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட எழுநூற்று நாற்பத்தொன்பது (749) கிலோகிராம் உலர் மஞ்சளை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பற்காக, கடற்படையினர் இலங்கையைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் பகுதியை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இதன்படி, வட மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர், கல்பிட்டி, உச்சமுனே கடற்பரப்பில் (2024 ஜூலை 31,) அதிகாலை மேற்கொண்டுள்ள இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான படகொன்று அவதானித்து பரிசோதிக்கப்பட்டதுடன் அங்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு வந்து பதினேழு (17) பைகளாக பொதி செய்யப்பட்ட 749 கிலோகிராம் உலர் மஞ்சளுடன், ஒரு டிங்கி படகு மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டது.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 மற்றும் 44 வயதுடைய கல்பிட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு (02) சந்தேகநபர்கள், 749 கிலோ கிராம் உலர் மஞ்சள் மற்றும் ஒரு (01) டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.