பஜாஜ் டிரையம்ப் பைக் மீதான தள்ளுபடி ஆஃபர் நீட்டிப்பு… மிஸ் பண்ணாதீங்க

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறூவனமும், டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள ட்வின் லபைக் மாடல்கள் அறிமுகமான ஓராண்டிலேயே 50,000 பைக்குள் விற்பனையாகியுள்ளன. சுமார் உலக அளவில் மிக சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பைக் விற்பனையை மேலும், ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு சலுகை சென்ற மாதம் அறிவிக்கப்பட்டது. இரண்டு பைக்குகளுக்கும் ரூ. 10 ஆயிரம் சலுகை அறிவிக்கப்பட்டது.

தள்ளுபடி ஆஃபரை நீட்டிப்பதாக ட்ரையம்ப் அறிவிப்பு

இந்நிலையில் இதற்கான சலுகை மேலும் நீட்டிக்கப்பட்டு, இந்தச் சலுகை 31 ஆகஸ்ட் 2024 வரை நீட்டிக்கப்படும் என ட்ரையம்ப் அறிவித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், புனவில் உள்ள சக்கன் பஜாஜ் வாகன உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படும் டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை 50 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது மற்றொரு சாதனையாகும். 

ஒரு வருட காலத்திற்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள்கள்

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு 2023 ஜூலை மாதத்தில், ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ட்ரையம்ப் நிறுவனம் பஜாஜ் ஆட்டோவுடன் இணைந்து ஸ்பீட் 400 பைக்கை அறிமுகப்படுத்தியது, இதன் ஆரம்ப விலை ரூ.2.23 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இதனுடன் ஸ்க்ராம்ப்ளர் 400X (Scrambler 400 X ) ஐ அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ. 2.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). 2024 ஜூலை மாதத்தில் தனது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ட்ரையம்ப் இந்தியா ரூ. 10,000 தலள்ளுபடியை அறிவித்த நிலையில், தள்ளுபடி ஆஃபர் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டீலர் நெட்வொர்க்கை விரிவுபடுத்தியுள்ள ட்ரையம்ப்

பிரிட்டிஷ் பிராண்ட் ஆன ட்ரையம்ப் அதன் டீலர் நெட்வொர்க்கை 100 ஷோரூம்களாக விரிவுபடுத்தியுள்ளது. 350சிசி முதல் 500சிசி வரையிலான உயர் செயல்திறன் கொண்ட பைக்குகளை தயாரிக்கும் பல நிறுவனங்கள், விற்பனையில் முதலிடத்தைப் பிடிக்க கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பஜாஜ் (Bajaj) தரவரிசையில் முன்னணியில் உள்ளது. இதனுடன் ட்ரையம்ப், கேடிஎம் (KTM) மற்றும் ஹஸ்க்வர்னா (Husqvarna) போன்ற பைக்குகள் களத்தில் உள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் முதலிடத்தில் உள்ளது. பல்சர் NS400Z விற்பனையில் ஹிமாலயன் 450 பைக்கை விட பின்தங்கியுள்ளது. பல்சர் NS400Zக்கு பின்னால் ட்ரையம்பின் 400 ட்வின் பைக் (ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400X) உள்ளது.

இப்போது ராயல் என்ஃபீல்டில் இருந்து ஒரு புதிய போட்டி பைக்கும் களத்தில் உள்ளது. இது ஹிமாலயன் 450 உடன் ஒப்பிடும்போது அபரிமிதமான விற்பனை திறனைக் கொண்டுள்ளது. இந்த பைக் கெரில்லா 450 ஆகும். இது சமீபத்தில் ரூ 2.39 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.