இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கைது

இலங்கை கடற்படையினர் (2024 ஆகஸ்ட் 03) கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து யாழ்ப்பாணம், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் நான்கு (04) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் இந்நாட்டு கடற்பகுதியில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, 2024 ஆகஸ்ட் 03 ஆம் திகதி பிற்பகல், இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பல இந்திய மீன்பிடிப் படகுகளைக் கண்டறிந்த வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் குறித்த மீன்பிடிப் படகுகளை விரட்டும் சிறப்பு நடவடிக்கையொன்று கட்டளையின் கடற்படை மற்றும் கடலோர காவல் துறையின் துரித தாக்குதல் படகுகள் மூலம் மேற்கொண்டுள்ளனர். அங்கு கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு (01) இந்திய மீன்பிடி படகுடன் நான்கு (04) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட ஒரு இந்திய மீன்பிடி படகு (01) மற்றும் படகில் இருந்த நான்கு (04) இந்திய மீனவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.