ஒரே குடும்பத்தில் 16 பேரை இழந்த பெண்: உடல்களை அடையாளம் காண தவிப்பு – வயநாடு சோகம்

மேப்பாடி (வயநாடு): கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 16 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்தக் குடும்பத்தை சேர்ந்த கலதிங்கல் நவ்ஷீபா (40), கடந்த 4 நாட்களாக கதறியபடி இருக்கிறார். நிலச்சரிவில் நவ்ஷீபாவின் தந்தை. தாய், அண்ணன், அண்ணி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல் கணவர் குடும்பத்தில் மாமியார், 2 நாத்தனார்கள். அவர்களுடைய 2 குழந்தைகள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மொத்தம் 16 பேர் இறந்ததால் நவ்ஷீபா கலங்கி நிற்கிறார்.

மேப்பாடி குடும்ப நல சிகிச்சை மையத்தில் கடந்த 4 நாட்களாக கண்ணீருடன் காத்திருக்கிறார். சூரல்மலை மற்றும் மேம்பாடி பகுதிகளில் நிலச்சரிவுப் பகுதியில் நிலத்தை தோண்டி ராணுவ வீரர்கள் உடல்களை மீட்டு வருகின்றனர். அந்த உடல்கள் மேப்பாடி சிகிச்சை மையத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. அங்கு உடல்கள் வந்ததும், அங்கிருப்பவர்களை வந்து பார்த்து அடையாளம் காண சொல்கின்றனர். அப்படி உடல்கள் கொண்டு வரும் போதெல்லாம் நவ்ஷீபா ஓடிச் சென்று பார்க்கிறார். நவ்ஷீபாவுக்கு நஹ்லா. தப்சீனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். அவர்களும் உடன் உள்ளனர். இதுகுறித்து நவ்ஷீயா கூறியதாவது:



என் குடும்பத்தில் அனைவரையும் இழந்துவிட்டேன். அவர்களுடைய உடல்களை இங்கு கொண்டு வருவார்களா என்று காத்திருக்கிறேன். இப்போது எங்கள் வீடு இருந்த இடத்தில் பெரிய பாறை ஒன்று கிடக்கிறது. இதுவரை என் தந்தை குன்ஹமது. தந்தை ஆயிஷா. 2 உறவினர்களின் உடல்கள் மட்டும் கிடைத்துள்ளன. என் கணவர் விடுமுறை யில் வந்திருக்கிறார். அதனால் நான் என் வீட்டில் இருந்தேன். அதனால் உயிர் பிழைத்தேன். இவ்வாறு நவ்ஷீபா கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.