மாபெரும் மீனவர் மாநாடு

தேசிய மீனவர் சம்மேளனத்தினூடாக ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, நாட்டில் உள்ள 15 உவர் நீர் மீன்பிடி மாவட்டங்கள், 07 நன்னீர் மாவட்டங்கள் உட்பட 22 மாவட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகளை ஆராயும் வகையில் மாபெரும் மீனவர் மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

22 மாவட்டங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட மீனவச் சங்கப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இந்த மாபெரும் மீனவ மாநாட்டை ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்பாக உள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.