இலங்கை கடற்படையினரால் (2024 ஆகஸ்ட் 03,) கிளிநொச்சி இரமதீவ் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று எழுபத்தாறு (176) கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா (ஈரமான எடை) பொதிகளை ஏற்றிச் சென்ற மூன்று (03) சந்தேக நபர்களுடன் டிங்கி படகொன்று (01) கைது செய்யப்பட்டது.
அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிறுவனத்தின் கடற்படையினர் மற்றும் விரைவு நடவடிக்கை படகுகள் படையணியின் வீரர்கள் இணைந்து இன்று (2024 ஆகஸ்ட் 03,) கிளிநொச்சி இரமதீவ் கடற்பகுதியில் மேற்கொன்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான படகொன்றை அவதானித்து சோதனையிட பட்டுள்ளதுடன் குறித்த படகில் ஐந்து பைகளில் (05) எண்பத்தாறு (86) பொதிகளாக அடைக்கப்பட்ட சுமார் 176 கிலோ 350 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா உடன் மூன்று சந்தேக நபர்கள் (03) மற்றும் குற்த்த டிங்கி படகு (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி எழுபது (70) மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 முதல் 35 வயதுக்குட்பட்ட மன்னார் மற்றும் வழைப்பாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த மூன்று சந்தேகநபர்கள் (03) கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு (01) ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.