நாடளாவிய ரீதியில் சிறுவர் பகல் பராமரிப்பு சேவைகள் அனைத்து மாகாணங்களிலும் ஒரே விதமாக அமுல்படுத்துவதற்கான தேசியக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது
சிறுவர் பகல் பராமரிப்பு சேவைகள் அனைத்து மாகாணங்களிலும் ஒரே விதமாக அமுல்படுத்துவதற்கும் முறைசார்ந்த ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை பொறிமுறையை அறிமுகப்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் சிறுவர் பகல் பராமரிப்பு வசதிகள் தொடர்பான தேசியக்கொள்கை நடைமுறைப்படுத்துவதற்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதியளித்துள்ளது,
இது தொடர்பாக நேற்று (05.08.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
5. சிறுவர் பகல் பராமரிப்பு வசதிகள் தொடர்பான தேசியக்கொள்கை
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சிறுவர் பகல் பராமரிப்பு நிலையங்களில் ஒரேவிதமான நடவடிக்கை முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றமையை உறுதிப்படுத்துவதற்கும் முறைசார்ந்த வகையில் பதிவு செய்தல் மற்றும் மேற்பார்வை பொறிமுறையை அறிமுகப்படுத்தும் நோக்கில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் 2017 ஆம் ஆண்டில் சிறுவர் பகல் பராமரிப்பு நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, சிறுவர் பகல் பராமரிப்பு சேவைகள் அனைத்து மாகாணங்களிலும் ஒரே விதமாக அமுல்படுத்துவதற்கும் முறைசார்ந்த ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை பொறிமுறையை அறிமுகப்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் சிறுவர் பகல் பராமரிப்பு வசதிகள் தொடர்பான தேசியக்கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.