பா.ரஞ்சித் இயக்கி விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. ஜீ.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
‘மதராசப்பட்டினம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ போன்ற பிரியாடிக் படங்களின் இசைக்கு பெயர்போன ஜீ.வி. பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு டைனமிக்காக இசையமைத்திருக்கிறார்.
‘தங்கலான்’ படத்திற்கு இசையமைத்தது குறித்து பேசிய ஜீ.வி.பிரகாஷ், “இது ரஞ்சித்தோட கனவுப் படம். இங்க இருக்கிற எல்லோரும் பயங்கரமாக உழைச்சுருக்காங்க. அதுல நானும் ஒரு பகுதியாக இருந்திருக்கேன். இந்தப் படத்துல பழங்குடி மக்களோட இசையைக் கொண்டு வர்றதுக்கு முயற்சி பண்ணியிருக்கேன். முதல் நாள்ல இருந்து இந்தப் படத்துல பணியாற்ற ஆர்வமாக இருந்தேன்.
இந்த மாதிரியானப் படங்கள்ல வேலை பார்க்கிறதுக்கு எப்போதாவதுதான் வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பு இதுக்கு முன்னாடி எனக்கு ‘மதராசப்பட்டினம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அசுரன்’ மாதிரியான படங்கள்ல கிடைச்சது.
விக்ரம் சார்கூட ‘தெய்வ திருமகள்’, ‘தாண்டவம்’ திரைப்படத்துக்குப் பிறகு இப்போ ‘தங்கலான்’ படத்துல இணைஞ்சுருக்கேன்” என்று பேசியிருக்கிறார்.