சுதந்திர தின சலுகை விற்பனை… Xiaomi ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிக்கு 57% வரை தள்ளுபடி

Xiaomi சுதந்திர தின சலுகை விற்பனை: சுதந்திர தினத்தை ஒட்டி ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் விற்பனை சலுகைகளை அறிவித்துள்ளன. இதை தவிர, Xiaomi வழங்கும் விற்பனை ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. சியோமியின் சலுகை விற்பனையில், ஸ்மார்போன், ஸ்மார்ட்டிவி உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு 57 சதவீதம் வரை தள்ளுபடியின் பலனைப் பெறலாம். இதில் ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பிற எலக்ட்ரானிக் கேஜெட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம். இங்கிருந்து பொருட்களை வாங்கினால் களைப் பார்ப்போம். எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்க திட்டமிடுபவர்களுக்கு சியோமியின் விற்பனைச் சலுகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்மார்ட் டிவி வாங்க கிடைக்கும் சுதந்திர தின சலுகைகள் விபரம்

Xiaomi சுதந்திர தின விற்பனையின் போது, ​​ஸ்மார்ட் டிவியை வாங்க 57 சதவீதம் வரை தள்ளுபடியின் பலனைப் பெறலாம். 

சியோமியின் ஸ்மார்ட் டிவியிலும் பம்பர் சலுகைகள்:

1. 55X கூகுள் டிவியை ரூ.34,999க்கு வாங்கலாம். 
2. 43X ப்ரோ டிவியை ரூ.28,999க்கு வாங்கலாம். 

ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கும் சுதந்திர தின சலுகைகள் விபரம்

சியோமியின் பிரபலமான ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனிற்கு ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த போனை (Smartphone) ரூ.27,999 ஆரம்ப விலையில் வாங்கலாம். இது தவிர;

– 12ஜிபி+256ஜிபி மாடல் ரூ.29,999 என்ற விலையில் கிடைக்கும்
– 12ஜிபி+512ஜிபி மாடல் என்ற விலையில் கிடைக்கும்
– ரெட்மி 13 5ஜியின் 6ஜிபி + 128ஜிபி ஸ்மார்ட்போன் ரூ.12,999 என்ற விலையில் கிடைக்கும். 
– ரெட்மி 13 5ஜியின் 8ஜிபி + 128ஜிபி வகை போன் ரூ.14,499 என்ற விலையில் கிடைக்கும்.

சீன பிராண்ட் Xiaomi மற்றும் Redmi டேப்லெட்டுகளுக்கு 62 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி பேட் ப்ரோ ரூ.19,999 முதல் கிடைக்கும். Xiaomi மற்றும் Redmi எக்கோ சிஸ்டம் தயாரிப்புகளுக்கும் 65 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் விற்பனை

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டிலும் (Flipkart and Amazon) ஆகஸ்ட் 6ம் தேதி முதல் சலுகை விற்பனை தொடங்கியுள்ளது. நீங்கள் மலிவான விலையில் பொருட்களை வாங்க விரும்பினால், அவர்களின் வலைத்தளங்கள் மற்றும் செயலிகளில் உள்ள சலுகை விற்பனை விவரங்களை கண்டிப்பாக படிக்கவும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.