அரசு நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள்

அரச ஊழியர்களின் வினைத்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கு அரச துறைகளில் தகவல் தொழில்நுட்ப முறைமைகளை ஒருங்கிணைப்பது சிறந்தது என்பதை அங்கீகரித்து ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர்,; மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டிஜிட்டல் மயமாக்கல் மூலம் அனைத்து அரச நிறுவனங்களையும் தரவு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மிகவும் வினைத்திறனான, பயனுள்ள மற்றும் தரமான சேவையைப் பெறுவதற்காக இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

15 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜையை அடையாளம் காண தேசிய அடையாள அட்டை இலக்கம், வெளிநாட்டவரை அடையாளம் காண அவரது கடவுச்சீட்டு இலக்கம், வெளிநாட்டினரின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், நிறுவனங்களை அடையாளப்படுத்துவதற்கு வியாபாரப்; பதிவு எண் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான உள்நாட்டவரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வெளிநாட்டினரின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என்றும் அவர் கூறினார்.

தரப்படுத்தலை எளிதாக்கும் என்று அமைச்சர் மேலும் கூறினார்,

இதனால் உரிய தரவுகளை ஏனைய அரச நிறுவனங்களுடன் முறையாக பரிமாறிக்கொள்ள முடியும், மேலும் முழுமையான டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான கட்டமைப்பு, அளவு மற்றும் தரமான மாற்றங்களின் விளைவாக இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.