பாடசாலை மைதானங்களை அரசியல் கூட்டங்களுக்குப் பயன்படுத்துவதை நிறுத்துதல் தொடர்பாக சுற்று நிருபத்தின் மூலம் தெரியப்படுத்த முடியும் எனக் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜெயந்த நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் பாடசாலை விளையாட்டு மைதானங்களை அரசியல் கூட்டங்களுக்காகப் பயன்படுத்தும் போது அவை சேதமடைவதாகவும் குறிப்பிட்டு மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க முன் வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த இதனைத் தெளிவுபடுத்தினார்.