டாடா கர்வ் ICE காரின் சிறப்பு அம்சங்கள்

டாடாவின் கர்வ்.இவி விற்பனைக்கு வந்துள்ள நிலையில் கர்வ் ICE மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 500 லிட்டர் பூட்ஸ்பேஸ் கொண்டுள்ள இந்த மாடல் ஆனது சிறப்பான வகையில் மைலேஜ் வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு இன்ஜினைக் கொண்டிருக்கின்றது புதிதாக உருவாக்கப்பட்ட 1.2 லிட்டர் ஹைப்பர்ஐயன் இந்த மாடல் ஆனது பெறுகின்றது.

Tata Curvv

Adaptive Tech Forward lifestyle architecture எனப்படுகின்ற ATLAS பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள கர்வ் காரில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனை கொண்டிருக்கின்றது.

புதிய Hyperion 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 125 hp பவரை 5,500RPMயிலும், 1700-3500RPM-ல் 225NM டார்க் வெளிப்படுத்தும். இதில் ஆறு வேகம் மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆறு வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் ஆனது பயன்படுத்தப்பட உள்ளது.

Revtron 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 119 hp பவரை 5,500RPMயிலும், 1700-4000RPM-ல் 170NM டார்க் வெளிப்படுத்தும். இதில் ஆறு வேகம் மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆறு வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் ஆனது பயன்படுத்தப்பட உள்ளது.

Kyrojet 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 116 hp பவரை 4,000RPMயிலும், 1500-2750RPM-ல் 260NM டார்க் வெளிப்படுத்தும். இதில் ஆறு வேகம் மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆறு வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் ஆனது பயன்படுத்தப்பட உள்ளது.

Level 2 ADAS பாதுகாப்புடன் 6 ஏர்பேக்குகள், காற்று சுத்திகரிப்பான், நேரடி TPMS, லேன் கீப் அசிஸ்ட், லேன் புறப்படும் எச்சரிக்கை, முன்னோக்கி மற்றும் பின்புற மோதல் எச்சரிக்கை உள்ளிட்ட வசதிகளுடன் வந்துள்ளது.

இந்த மாடலில் Smart, Pure, Pure+, Pure+ S, Creative, Creative S, Creative+ S, Accomplished S மற்றும் Accomplished+ A போன்ற வேரியண்டுகள் விற்பனைக்கு வரவுள்ளது.

சிட்ரோயன் பஸால்ட் கூபே எஸ்யூவி மாடலுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் வகையில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

This News டாடா கர்வ் ICE காரின் சிறப்பு அம்சங்கள் appeared first on Automobile Tamilan.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.