வினேஷ் போகத் தகுதியிழப்புக்கு அம்பானி மருத்துவமனை டாக்டர் காரணமா?

Vinesh Phogat Olympic Disqualification : பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் எடை அதிகமாக இருந்த்தாக கூறி இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் முறையிட்டும் ஒலிம்பிக் நிர்வாகம் இந்த விஷயத்தில் மறுபரிசீலனை செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. 50 கிலோ எடைப்பிரிவில் விளையாடும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும் தன்னுடைய எடையை குறைக்க நேற்று ஒரே இரவில் முடியை வெட்டியும், ரத்தம் கொடுத்தும் கடும் முயற்சி செய்திருக்கிறார். 

அப்போதும் அவரால் ஒலிம்பிக் நிர்ணயித்திருக்கும் எடை அளவை எட்ட முடியவில்லை. இதனால், ஒலிம்பிக் கமிட்டி வினேஷ் போகத் இறுதிப் போட்டி விளையாட தடை விதித்ததுடன் வினேஷ் போகத்துடன் இறுதிப்போட்டி விளையாட இருந்த அமெரிக்க வீராங்கனைக்கு தங்கப்பதக்கம் கொடுக்கப்படும் என அறிவித்தது. வெள்ளிப் பதக்கம் யாருக்கும் கொடுக்கப்படாது. இறுதிப்போட்டிக்கு முன்பாக ஒலிம்பிக் கமிட்டி எடுத்த இந்த நடவடிக்கையில் சதி இருப்பதாக இந்திய மல்யுத்த வீரர்கள் மற்றும் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் உள்ளிட்ட முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

August 7, 2024

வினேஷ் போகத்துக்கு எதிராக வேண்டுமென்றே சதி செய்து, அவரை இறுதிப்போட்டியில் விளையாடாமல் செய்துள்ளனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் பணிபுரியும் நியூட்ரியனிஸ்ட் டாக்டர் டின்ஷா பார்டிவாலா மீதும் வைக்கப்பட்டுள்ளது. அவர் தான் வினேஷ் போகத்தின் எடையை கவனிக்கும் நியூட்ரியனிஸ்டாக இருக்கிறார். அவர் யாரோ ஒரு சிலர் அறிவுரையின்பேரில் வினேஷ் போகத் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் ஆடக்கூடாது என்பதற்காக இந்த சதியை நிகழ்த்தியுள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

அதாவது, வினேஷ் போகத் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜகவைச் சேர்ந்த பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார் சுமத்தி டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் கடந்து சென்றதுடன், போலீஸ் தடியடி நடத்தி போராட்டத்தையும் கலைக்க முயற்சித்தது. இதனால், மல்யுத்த வீரர்கள் மத்திய அரசு தங்களுக்கு கொடுத்த பத்ம விருதுகளை திருப்பிக் கொடுத்தனர். அதற்கு பாஜகவைச் சேர்ந்தவர்கள் வினேஷ் போகத் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்தனர். பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டனர். இந்த விவகாரத்தை மனதில் வைத்து பிரிஜ் பூஷனுக்கு ஆதரவான பெரிய ஆட்கள் இப்போது வினேஷ் போகத் மல்யுத்தத்தில் ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக சதி செய்திருக்கலாம் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.