டெல்லி வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களை உடனடியாக நாடு திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அண்மையில் வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 % இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்றவா்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு அவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பலா் மாயமாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இதைக் கண்டித்து பிரதமராக பதவி வகித்த ஷேக் ஹசீனா மற்றும் அவரின் அரசுக்கு எதிராக ‘மாணவா் […]