புதுச்சேரி இன்று புதுச்சேரி ஆளுநராக கைலாசநாதன் பதவி ஏற்றுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, புதுச்சேரி பொறுப்பு ஆளுநர் பதவி கூடுதலாக அளிக்கப்பட்டது. புதுச்சேரியின் பொறுப்பு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால் புதுசேரி புதிய ஆளுநராக கேரளா மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைலாசநாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். நேற்று மதியம் […]