காத்மாண்டு: நேபாளம் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கை: கடந்த புதன்கிழமை மதியம் 1:54 மணிக்கு நேபாள தலைநகர் காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர்டைனாஸ்ட்டி ஹெலிகாப்டர் சியாபுருபென்ஸி நகருக்கு புறப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் புறப்பட்ட அடுத்த 3 நிமிடத்தில் கட்டுப் பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் காத்மாண்டு நகரின் வடமேற்கு பகுதியில் உள்ளசூர்யாசவுர் எனும் மலைக்காட்டில் ஹெலிகாப்டர் நொறுங்கிவிழுந்தது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் மற்றும் ராணுவ மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், 4 பயணிகளும்,விமானியும் விபத்தில் உயிரிழந்துவிட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சவுர்யா விமானம் விபத்தில் சிக்கி அதில் பயணித்த 18பயணிகளும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.