நண்பர்கள் தினம்: நட்பை புறக்கணித்த 15 வயது சிறுமி; ரயில் முன் தள்ளிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பிரதாப் நகர் காவல்நிலையத்துக்கு வந்த ஒருவர், “ஆகஸ்ட் 2-ம் தேதி மாலை கம்ப்யூட்டர் வகுப்புக்கு செல்வதாக கூறிச் சென்ற என் 15 வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. அவளை மீட்டுத் தரவேண்டும்” எனப் புகார் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணை தொடங்கியது. பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையும் நடத்தியது. இதற்கிடையில், ரயில் தண்டவாளத்தில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

கைது

உடனே சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை அதிகாரிகள், சிறுமியை அடையாளம் காட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினர்களை வரவழைத்தனர். அந்த சடலம் காணாமல் போன சிறுமிதான் என்பதை அந்த குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் புலனாய்வு மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் விசாரணையை தொடங்கியது காவல்துறை. அதில் சந்தேக நபர் ஷூர்வீர் சிங் என்பவர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்.

அவரிடம் விசாரித்ததில், “நண்பர்கள் தினத்தன்று, கொலை செய்யப்பட்ட சிறுமியை சந்தித்தேன். நண்பர்கள் தின வாழ்த்தை தெரிவித்து, என்னுடன் நட்பு கொள்ள வேண்டினேன். ஆனால் அவர் என்னை நண்பராக ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அவரை ஒருமுறை சந்திக்கக் வேண்டும் எனக் கேட்டு ரயில் பாதையான டெபாரிக்கு அழைத்தேன். அவர் வந்தவுடன், ரயில் வரும்போது தண்டவாளத்தில் அவரை தள்ளி கொலை செய்தேன்” எனக் தெரிவித்திருக்கிறார்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றம்சட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.