கனவுலகிலும் பரபரப்பை ஏற்படுத்த தயாராகும் ஜியோ! விர்சுவல் ரியாலிடியில் முகேஷ் அம்பானி!

ரிலையன்ஸ் ஜியோவும் மெட்டா நிறுவனத்தின் தனது மெய்நிகர் ரியாலிட்டி திட்டமான Horizon இரண்டும் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுவருவதாக தெரிகிறது. Inc42 வெளியிட்ட செய்தியின்படி, Meta நிறுவனத்தின் மெய்நிகர் ரியாலிட்டி திட்டமான Horizon உரிமம், ரிலையன்ஸ் ஜியோவிற்கு வழங்குவது தொடர்பாக மெட்டா பரிசீலித்து வருகிறது என்று தெரியவந்துள்ளது.

ஃபேஸ்புக்-இன் தாய் நிறுவனமான மெட்டா, Horizon OS பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நிறுவனங்களுடன் பணியாற்றி வருகிறது. அதேபோல ரிலையன்ஸ் ஜியோ தனது அடுத்த VR சாதனத்திற்கு Horizon ஐப் பயன்படுத்த விரும்புகிறது.  இதன் தொடர்ச்சியாக, ஜியோவுடன் மெட்டா இணைந்து பணியாற்றவிருப்பதாக தெரியவந்துள்ளது. 

இந்த இணைப்பால், முகேஷ் அம்பானி ‘கனவு உலகில்’பரபரப்பை ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது. ஜியோ நிறுவனம் மெய்நிகர் ரியாலிட்டி  (virtual reality) துறையில் தீவிரமாக இயங்க திட்டமிட்டுள்ளது.

2023 இல் VR ஹெட்செட்டை அறிமுகப்படுத்திய ஜியோ 

AR/VR சந்தையில் ஃபேஸ்புக் முதன்மையானதாக உள்ளது என்பதும்,  2024 ஆம் ஆண்டில், நிறுவனம் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் VR சாதன தயாரிப்பாளரான Oculus ஐ வாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோ AR/VR துறையில் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், நிறுவனம் JioDive VR ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியது.

360 டிகிரி அனுபவம்
ஜியோடைவ் விஆர் (JioDive VR) ஹெட்செட்டில், வாடிக்கையாளர்கள் 360 டிகிரி ஸ்டேடியத்தில் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கும். அனுமதிக்கிறது. ஜியோடைவ் ஹெட்செட்டின் விலை ரூ. 1,299 மட்டுமே. இது, ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் வேலை செய்கிறது. இந்த சாதனம் கொடுக்கும் 360 டிகிரி முழு அனுபவத்தைப் பெற, JioImmerse செயலியும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.  

மெட்டா & ஜியோ கூட்டாண்மை

2020ஆம் அண்டில் மெட்டா மற்றும் ஜியோ இடையேயான கூட்டாண்மை தொடங்கியது, ஜியோ பிளாட்ஃபார்ம்களில் மெட்டா பெரும் முதலீடு செய்துள்ளது.  இரு நிறுவனங்களுக்கு இடையிலான இந்த கூட்டு வலுவடைந்து வருகிறது என்பதும்,  மெட்டா நிறுவனம் இந்தியாவில் செய்த மிகப்பெரிய முதலீடுகளில் ஜியோ பிளாட்ஃபார்ம் முதலீடும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் VR வணிகம்

இந்திய வாடிக்கையாளர்களுக்கு மேலதிக சேவைகளையும், சாதனங்களையும் வழங்க, இரு நிறுவனங்களும் தங்கள் சேவைகளை இணைக்கத் தொடங்கியுள்ளன. இந்த இணைப்பிற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், இந்த கூட்டாண்மை வெற்றி பெற்றால் இந்தியாவில் VR வணிகம் என்பது முற்றிலும் வேறொரு கோணத்தில் மாறிவிடும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.

மெட்டா & ஜியோ

மெட்டா மற்றும் ஜியோ என இரு நிறுவனங்களுமே இன்றைய வர்த்தகத்திற்கு கொடுக்கும் முக்கியத்தை, எதிர்கால வணிகம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கும் கொடுக்கும் நிறுவனங்கள் என்பதால் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதால், இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகள் கிடைக்கும் என்று தொழில்நுட்பத் துறையினர் நம்புகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.